நான் பேசியது போலவே டப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர்.. சரவணன் எம்.எல்.ஏ. பல்டி! #MLAsForSale

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கூவத்தூர் முகாம் தொடர்பாக நான் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை. நான் யாரிடமும் பணம் வாங்கவில்லை. யாரோ என் குரலைப் போல டப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர் என்று மதுரை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ சரவணன் கூறியுள்ளார்.

டைம்ஸ் நவ்- மூன் டிவி இணைந்து நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூவத்தூர் முகாமில் கொண்டு போய் அடைக்கப்பட்ட சசிகலா குரூப் எம்.எல்.ஏக்களுக்கு பணமும், தங்கமும் அள்ளி இறைக்கப்பட்டதாக வெளியான செய்தி உண்மைதான் என்பதை அந்த ஸ்டிங் ஆபரேஷனில் சிக்கிய எம்.எல்.ஏ சரவணனின் பேச்சு நிரூபிப்பதாக உள்ளது.

ஆனால் தற்போது தான் அப்படியெல்லாம் பேசவில்லை. யாரோ டப்பிங் கொடுத்து விட்டனர் என்று கூறி பல்டி அடித்துள்ளார் சரவணன். இதுதொடர்பாக அவர் தந்திக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

சொல்லாமல் கொள்ளாமல் கூட்டிச் சென்றனர்

சொல்லாமல் கொள்ளாமல் கூட்டிச் சென்றனர்

கூவத்தூருக்கு என்னைப் போன்று அனைத்து எம்.எல்.ஏ.க்களையும் எந்த காரணமும் சொல்லாமல் அழைத்துச் சென்றார்கள். அங்கு சென்றபின் நடந்த வி‌ஷயங்களை அறிந்தேன். அதற்குள் என்னை தொடர்பு கொண்ட தொகுதி மக்கள், நீங்கள் பன்னீர்செல்வம் அணிக்கு செல்ல வேண்டும் என்று கூறினர். அந்த அடிப்படையில் பன்னீர் செல்வம் அணியில் என்னை இணைத்துக்கொண்டேன். தொடர்ந்து அங்கிருந்து மக்கள் பணியாற்றியும் வருகிறேன்.

டப்பிங் கொடுத்துள்ளனர்

டப்பிங் கொடுத்துள்ளனர்

இந்த சூழ்நிலையில் 3 மாதத்திற்கு முன்பு, எடுக்கப்பட்டதாக கூறப்படும் ஒரு வீடியோவை அப்போதே வெளியிடாமல் தற்போது வெளியிடுவது ஏன்? அதில் கூறப்பட்டுள்ள எந்த கருத்தையும் நான் சொல்லவில்லை. எனது குரலைப்போல் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளனர். கூவத்தூரில் எனக்கு பணம் தருவதாக யாரும் சொல்லவில்லை. நானும் யாரிடமும் பணம் வாங்கவில்லை.

வதந்தி பரப்புகிறார்கள்

வதந்தி பரப்புகிறார்கள்

கடந்த 5 தினங்களுக்கு முன்பு கூட பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பேசிய கூட்டத்தில் நானும் கலந்துகொண்டேன். அப்போது நான், பன்னீர்செல்வம் அணியில் இருந்து விலகி விட்டதாக வாட்ஸ்-அப்பில் தகவல் பரவியது. இது போன்ற பொய்யான தகவலை ஏன் பரப்புகிறார்கள் என்று எனக்கு தெரியவில்லை.

ஓபிஎஸ் அணியில்தான் இருப்பேன்

ஓபிஎஸ் அணியில்தான் இருப்பேன்

நான் தொடர்ந்து பன்னீர்செல்வத்துடன் இருப்பேன். இல்லாவிட்டால் எனது பதவியை ராஜினாமா செய்துவிடுவேன். எனக்கு பணம் கொடுப்பதாக யாரும் சொல்லவில்லை. இது தான் உண்மை என்று கூறியுள்ளார் சரவணன்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Madurai South MLA Saravanan has refuted the news report that he had told that Kuvathur MLAs were showered with gold and cash by Sasikala.
Please Wait while comments are loading...