நம்பிக்கை வாக்கெடுப்பில் எம்எல்ஏக்கள் யாரும் மிரட்டப்படவில்லை.. ஐகோர்ட்டில் முதல்வர் பதில் மனு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் போது எம்எல்ஏக்களை மிரட்டவில்லை என முதல்வர் பழனிசாமி பதில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

சட்டசபையில் கடந்த 18-ந் தேதி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரியது. இதை ரகசிய வாக்கெடுப்பாக நடத்த வேண்டும் என திமுக தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

ஆனால் சபாநாயகர் தனபால் இதை நிராகரித்துவிட்டார். இதனால் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்குள்ளேயே போராட்டம் நடத்தினர். சட்டசபையில் தாக்குதல் போராட்டம் நடத்திய திமுக எம்.எல்.ஏக்களை சட்டசபை மார்ஷல் சீருடையில் வந்த போலீஸ் உயர் அதிகாரிகள் குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றினர். அப்போது ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏக்கள் கடுமையாக தாக்கப்பட்டனர்.

வழக்கு

வழக்கு

இதனைத் தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் மற்றும் வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை தலைவர் கே. பாலு உள்ளிட்டோர் நம்பிக்கை வாக்கெடுப்பு முறைக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர்.

நோட்டீஸ்

நோட்டீஸ்

இந்த வழக்கு தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சபாநாயர் தனபால், ஆளுநரின் செயலாளர், தலைமைச் செயலாளர், சட்டசபை செயலாளர் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

பதில் மனு

பதில் மனு

இந்த வழக்கில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த மனுபில் சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது எம்எல்ஏக்கள் யாரும் மிரட்டப்படவில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிடப்பட்டுள்ளார்.

கொறடா உத்தரவு

கொறடா உத்தரவு

மேலும், நம்பிக்கை தீர்மானத்தில் அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்று எம்எல்ஏக்களுக்கு கொடறா உத்தரவிட்டிருந்ததாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். அதன்படியே எம்எல்ஏக்கள் செயல்பட்டார்கள் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதில் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
CM Edapadi Palanisamy replies Chennai High Court that MLAs were not threatened.
Please Wait while comments are loading...