For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மோடியை ஆதரிக்கும் வைகோ... எதிர்க்கும் திருமாவளவன்: மநகூவில் பிளவு?

பிரதமர் மோடியின் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கையை மனப்பூர்வமாக ஆதரிப்பதாக வைகோ கூறியுள்ளது மக்கள் நலக்கூட்டணியில் உள்ள மற்ற தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை : கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக பிரதமர் மோடி நவம்பர் 8ஆம் தேதி நள்ளிரவு முதல் 500 மற்றும்1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார். கடந்த 19 நாட்களாக சில்லறை தட்டுப்பாடு காரணமாக மக்கள் தடுமாறி வருகின்றனர்.

மோடியின் அறிவிப்புக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் அரசியல் கட்சியினர் கருத்து கூறி வருகின்றனர். மக்கள் நலக் கூட்டணி தலைவர்களான இடதுசாரிகளும், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனும் ஆரம்பம் முதலே மோடியின் நடவடிக்கைகளை தீவிரமாக எதிர்த்து வருகின்றனர்.

பணத்தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மிகப்பெரிய ஆர்பாட்டத்தை நடத்தினார் திருமாவளவன். மோடியையும் மத்திய அரசையும் கடுமையாக கண்டித்தார் திருமாவளவன்.

மத்திய அரசைக் கண்டித்து போராட்டம்

மத்திய அரசைக் கண்டித்து போராட்டம்

மத்திய அரசை கண்டித்து நாளை நாடு முழுவதும் எதிர்கட்சிகள் போராட்டம் நடத்துகின்றன. தமிழகத்திலும் இந்த போராட்டத்துக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. தி.மு.க., காங்கிரஸ், இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பிரதான கட்சிகள் அனைத்துமே நாடு தழுவிய இந்த போராட்டத்தில் ஈடுபடுகின்றன.

வைகோ அறிக்கை

வைகோ அறிக்கை


மக்கள் நல கூட்டணி கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டாலும் இந்த கூட்டணியின் முக்கிய தலைவரான வைகோ இந்த போராட்டத்தை ஆதரிக்கவில்லை.
மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கையில் மோடியின் நடவடிக்கையை பாராட்டியதோடு மக்களிடம் மோடிக்கு ஆதரவு உள்ளதாகவும் கூறினார்.

மதிமுக வரவேற்பு

மதிமுக வரவேற்பு

நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ரூபாய் 500, 1000 நோட்டு செல்லாது என பிரதமர் மோடி அறிவிப்பால் பொதுமக்கள் பெரிய வரிசையில் நிற்கிறார்கள்; நாடாளுமன்றத்தில் அமளியால் அவை நடவடிக்கை முடங்கி போயுள்ளது என்று பலர் கூறி வருகின்றனர். ஆனால், மோடி எடுத்துள்ள நடவடிக்கையை மதிமுக தரப்பில் நாங்கள் வரவேற்கிறோம்.

கறுப்பு பண ஒழிப்பில் அக்கறையில்லாதவர்கள்

கறுப்பு பண ஒழிப்பில் அக்கறையில்லாதவர்கள்

கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக மோடி திடீரென அறிவித்த அறிவிப்புக்கு காலக்கெடு கொடுத்திருக்க வேண்டும் என்று சொல்பவர்கள் உண்மையில் கறுப்புப் பண ஒழிப்பில் அக்கறை இல்லாதவர்கள் என்றே கூற வேண்டும். முன்பே தகவல் சொல்லிவிட்டு மோடி இந்த நடவடிக்கையை எடுத்தால் கறுப்புப் பண பதுக்கல்காரர்கள் தங்களது கறுப்புப் பணத்தை பதுக்கி விடுவார்களே. அவர்களால் அவ்வாறு செய்ய முடியாததால்தான் மோடிமீது குற்றம் கூறி வருகின்றனர்.

நாட்டு மக்களின் மீது நம்பிக்கை

நாட்டு மக்களின் மீது நம்பிக்கை

நட்டு நலனின்மீது மிகுந்த அக்கறை கொண்டதால்தான் நிதியமைச்சருக்கே கூட தெரியாமல் மோடி இந்த அதிரடி தாக்குதலை நடத்தியிருக்கிறார். இதனால் அடித்தள மக்கள் முதல் நடுத்தர மக்கள் வரை அனைவரது வரவேற்பையும் மோடி பெற்றுள்ளார். எனவே இந்த கறுப்புப் பணம் ஒழிப்பு நடவடிக்கையில் மோடி இன்னும் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார் வைகோ.

ஜி. ராமகிருஷ்ணன் கேள்வி

ஜி. ராமகிருஷ்ணன் கேள்வி

இதுதொடர்பாக கருத்து கூறியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், ரூபாய் 500, 1,000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்ததும் திமுக, தமாகா, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்றன. ஆனால், மக்கள் படும் துயரங்களை கண்கூடாகப் பார்த்த பிறகு, கடுமையாக எதிர்க்கத் தொடங்கினர். வீதிக்கு வந்து போராடவும் தொடங்கியுள்ளனர். இடதுசாரி கட்சிகள் ஆரம்பம் முதலே மோடியின் அறிவிப்பை கடுமையாக எதிர்த்து வருகிறோம். மக்கள் படும் கஷ்டங்களைப் பார்த்த பிறகும் மோடியின் நடவடிக்கையை வைகோ ஆதரித்திருப்பது வேதனை அளிக்கிறது. அவரது இந்த நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கடுமையாக எதிர்க்கிறது என்று கூறியுள்ளார்.

மநகூவிற்குள் விரிசல்

மநகூவிற்குள் விரிசல்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் பிரதமர் மோடி நாடகமாடுகிறார். எனவே, மத்திய அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு அளிப்பதை ஏற்க முடியாது என்று கூறியுள்ளார். ஏற்கனவே காவிரி விவகாரம், மூன்று தொகுதி தேர்தல் என மக்கள் நலக் கூட்டணிக்குள் குழப்பங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் இப்போது வைகோவின் மோடி ஆதரவு, கூட்டணிக்குள் மேலும் விரிசலை உருவாக்கி உள்ளது.

திருமாவளவன் பாதை

திருமாவளவன் பாதை

விடுதலைப்புலிகளை ஒழித்த விசயத்தில் காங்கிரசுக்கு பெரும் பங்கு உண்டு என்று வைகோ கடுமையாக விமர்சித்து வருகிறார். திமுக மீதான ஊழல் புகார்கள் பற்றியும் விமர்சிக்க தவறுவதில்லை. அந்த அணி மக்களால் வெறுக்கப்படும் அணி என்று பகிரங்கமாக கூறி வரும் வைகோ, பாஜக பக்கம் தாவுவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரூபாய் நோட்டு விவகாரத்தில் மக்கள் சிரமப்பட்டாலும் பிரதமர் மோடியின் நடவடிக்கைக்கு ஆதரவே பேசி வருகிறார் வைகோ. இதன் மூலம் மக்கள் நல கூட்டணியில் கருத்து வேறுபாடு பகிரங்கமாகவே வெளிவந்துவிட்டது.

அணி மாறும் திருமாவளவன்

அணி மாறும் திருமாவளவன்

நெல்லித்தோப்பு தேர்தலில் காங்கிரசுக்கு ஆதரவு அளித்தார். இந்திரா நூற்றாண்டு விழாவில் பங்கேற்று ராகுல் பிரதமர் ஆவார். காங்கிரஸ் ஆட்சிக்கு வர வேண்டும் என்று கூறினார். காங்கிரஸ் ஆட்சி தான் இப்போதைய சூழலில் தேவையானது என்று பேசி வருகிறார். இதன் மூலம் திருமாவளவன் காங்கிரஸ் பக்கம் திரும்பிவிட்டார் என்றே தெரிகிறது.

லோக்சபா தேர்தலில் மக்கள் நல கூட்டணி இருக்கப் போவதில்லை. கம்யூனிஸ்டு மற்றும் விடுதலை சிறுத்தைகள் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணியில் தஞ்சம் அடைந்துவிடும் என்றே கருதப்படுகிறது. வைகோ பாஜக பக்கம் சாய்வார் என்றும் பரவலாக பேசப்படுகிறது. விரைவில் மக்கள் நலக்கூட்டணி கரைந்து காணாமல் போய்விடும் என்றே அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

English summary
As Vaiko is supporting to PM Modi on demonetisation VCK is opposing him vehemently and PWF may face a split over this.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X