திண்டுக்கல் சுற்றுவட்டாரங்களில் மிதமான மழை-விவசாயிகள் மகிழ்ச்சி

Posted By:
Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: வறட்சியின் பிடியில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இன்று மிதமான மழை பெய்தது.

கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்க்கும் போதெல்லாம் நமக்கு இப்படி ஒரு மழை வராதா? என்பதுதான் திண்டுக்கல் மாவட்ட விவசாயிகளின் ஏக்கம். கடந்த சில மாதங்களாக மழை பெய்தும் கூட நிலத்தடி நீர் இன்னமும் உயரவில்லை.

Moderate Rain in Dindigul district

ஆறுகளில் நீர்வரத்து என்பதே இல்லாத நிலைமைதான். மழை அவ்வப்போது தலை காட்டிவிட்டு போவதுதான் வாடிக்கை.

இன்று பகலில் வேடசந்தூர் உள்ளிட்ட இடங்களில் கனமழை கொட்டியது. ஆனால் திண்டுக்கல் நகரம் வெயிலின் பிடியில் இருந்தது.

மாலையில் திண்டுக்கல் மற்றும் சுற்று வட்டாரங்களில் சடசடவென மழை கொட்டியது. ஆனால் சில நிமிடங்களில் கனமழை ஓய்ந்து மிதமாக கொட்டி முடித்தது. இந்த மழை தொடர வேண்டும் என்பது விவசாயிகளின் எதிர்பார்ப்பு.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Moderate showers in Dindigul and nearby areas on Wednesday.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற