For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

”நிக் நேம்ல கூப்டாத்தான் பிடிக்கும்” அரசியல் தலைவர்கள் புது அதிரடி

Google Oneindia Tamil News

சென்னை: மக்கள் மத்தியில் வெகுவாக ரசிக்கப் படுவதால் பெரும்பாலும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் தங்களது கற்பனை பெயரால் அழைக்கப்படுவதையே விரும்புகின்றனர்.

மத்திய பிரதேச மாநிலம் மால்வா நிமர் பகுதியில் பெரும்பாலான வேட்பாளர்கள் மக்கள் மத்தியில் பிரபலமான தங்களின் புனைப்பெயர்களை பிரசாரத்துக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

இதனால் பெரும்பாலும் பிரச்சாரங்களில் கூட தலைவர்களின் புனைபெயர்கள்தான் காணப்படுகின்றன.அதே போல் தமிழ்நாட்டிலும் சில தலைவர்கள் அவர்களுடைய புனைபெயருக்குதான் பிரபலம்.

அம்மோய்:

அம்மோய்:

தமிழக முதல்வரான ஜெயலலிதாவை அவருடைய பெயரை சொல்லி அழைத்தவர்களை விட "அம்மா" என்றும் "புரட்சி தலைவி" என்றும் அழைப்பவர்கள்தான் அதிகம்.

பொன்ரா என்னும் ராதாகிருஷ்ணன்:

பொன்ரா என்னும் ராதாகிருஷ்ணன்:

தமிழக் பாஜக தலைவரான பொன்.இராதாகிருஷ்ணன் கூட தன்னை "பொன்ரா" என்று அழைப்பதையே பெரும்பாலும் விரும்புகின்றார்.அவர் கட்சிக்குள்ளும் அவரை அப்படித்தான் அழைக்கின்றனர்.

”பருப்பு” சாரி “கருப்பு” :

”பருப்பு” சாரி “கருப்பு” :

தேமுதிக தலைவரான விஜயகாந்த்தை கூட அனைத்து தொண்டர்களும் "கருப்பு எம்ஜிஆர்" என்றுதான் அழைத்து மகிழ்கிறார்கள் என்பது தெரிந்ததே.

”தை” என்னும் மஹஜன்:

”தை” என்னும் மஹஜன்:

பாஜவின் மூத்த தலைவரான சுமித்ரா மஹஜன் இந்தூர் தொகுதியில் 8 ஆவது முறையாக தொடர் வெற்றியை நோக்கி களமிறங்கியுள்ளார். இவரது புனைப்பெயர் "தை" என்பதாகும்.

”சாட்டு” என்னும் சத்யநாராயண்:

”சாட்டு” என்னும் சத்யநாராயண்:

இப்பெயரே பிரசாரத்திலும், போஸ்டர்களிலும் பயன்படுத்தப்படுகிறது. இவரை எதிர்த்து போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சத்ய நாராயணன் பட்டேல் "சாட்டு" என்ற தனது புனைப்பெயரில் வலம் வருகிறார்.

”குட்டா” பிரேம் சந்த்:

”குட்டா” பிரேம் சந்த்:

"சாட்டு" என்றுதான் எல்லா போஸ்டர்களில் அச்சிடப்படுகின்றன. உஜ்ஜைனி தொகுதியில் காங்கிரஸ் எம்பி பிரேம் சந்த் போரசி "பிரேம் சந்த் குட்டா" என்ற தனது புனைப்பெயரை அதிகம் பயன்படுத்துகிறார்.

”பரேஸ் தாதா” பராக்:

”பரேஸ் தாதா” பராக்:

மன்ட்சார் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு எம்எல்ஏ ஆன பராஸ் சக்லேசா இம்முறை ஆம் ஆத்மி சார்பில் போட்டியிடுகிறார். இவர் "பரேஸ் தாதா" என்றழைக்கப்படுகிறார்.

செல்லப்பேருக்குதான் மவுசு:

செல்லப்பேருக்குதான் மவுசு:

இது குறித்து கட்சி நிர்வாகிகள் கூறுகையில், "தலைவர்களின் புனைப்பெயர்தான் மக்கள் மத்தியில் அதிகம் இடம் பிடித்துள்ளது. குறிப்பாக, கிராமப்புறங்களில் தலைவர்களின் நிஜப்பெயரை விட புனைப்பெயரை சொன்னால்தான் பலருக்கும் தெரிகிறது. அதனால் புனைப்பெயரையே பயன்படுத்துகிறோம்" என்கின்றனர்.

English summary
Party leader always like to use the nick name in the campaigns and posters because the people popularly known the nick names mostly.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X