மகன் வாங்கிய காரில் மருமகள் செல்வதா? காரை தீயிட்டு கொளுத்திய பாசக்கார தாய்! சென்னையில் பரபரப்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil
  மகன் வாங்கிய காரில் மருமகள் சென்றதால் காரை எரித்த மாமியார்

  சென்னை: சென்னையில் மகன் வாங்கிய காரில் மருமகள் செல்லக் கூடாது என்பதற்காக காரை அவரது தாயே தீயிட்டு கொளுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  சென்னை அடுத்த ஆவடி காந்தி நகர் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன். இவர் தனது தாய் இந்திராணி மற்றும் மனைவி வைஜெயந்திமாலா ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில் வீட்டு வீடு வாசற்படி என்பதற்கேற்ப மாமியார்- மருமகளிடையே பிரச்சனை ஏற்பட்டது.

  Mother sets fire on Son's car because of her daughter in law travels in that car

  ராஜேந்திரன் தாயை தனியாக குடி வைத்துள்ளார். இந்நிலையில் அண்மையில் ராஜேந்திரன் புது கார் வாங்கியுள்ளார். அந்த காரில் வைஜெயந்திமாலா உட்கார்ந்து செல்வது இந்திராணிக்கு பிடிக்கவில்லை.

  இதனால் அந்த காரை தீவைத்து கொளுத்த திட்டமிட்டார். நேற்று இரவு மகன் வீட்டுக்கு வெளியே நின்றிருந்த காரை தீவைத்துக் கொளுத்தினார்.

  இதில் வாகனத்தின் முன்பக்கம் முற்றிலும் எரிந்து சேதமடைந்து. சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆவடி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர். மர்மநபர்கள் தீவைத்து கொளுத்தியதாக நினைத்த போலீஸார் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.

  அதில் மண்ணெண்ணெய் கேனுடன் இந்திராணி செல்லும் காட்சிகள் அந்த பகுதியில் பதிவாகியிருந்தது. இதையடுத்து இந்திராணியிடம் விசாரணை நடத்தியதில் அவர்தான் காருக்கு தீவைத்தேன் என்பதை ஒப்புக் கொண்டார்.

  வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Mother torches son's car because her daughter in law travels in that car. In the night, she sets fire on the car.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற