இமானுவேல் சேகரனின் நினைவு நாள்.. நாம் தமிழர் கட்சி சார்பில் நாளை மலர் வணக்கம் நிகழ்ச்சி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இமானுவேல் சேகரனின் 60ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி நாம்தமிழர் சார்பில் மலர்வணக்க நிகழ்வு நாளை நடைபெறுகிறது.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சி கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை:

Naam Tamilar party to observe Immanuvel Sekaran death anniversary

பிறப்பின் அடிப்படையில் மனிதன் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று பேதம்பார்க்கும் சாதிய நோயை ஒழிப்பதற்குப் போராடிய இமானுவேல் சேகரனாரின் 60ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி நாளை 11-09-2017 திங்கட்கிழமை காலை 10 மணிக்கு சென்னையிலுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மலர்வணக்க நிகழ்வு நடைபெறவிருக்கிறது.

இந்நிகழ்வில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நினைவேந்தல் சுடரேற்றி மலர்வணக்கம் செய்கிறார். நமது ஐயா இமானுவேல் சேகரனார் எந்த நோக்கத்திற்காகத் தன் இன்னுயிரை ஈந்தாரோ அந்த நோக்கத்தை நிறைவேற்றுவோம் என்கிற உறுதியேற்று சாதி, மத உணர்ச்சியைச் சாகடித்து 'நாம் தமிழர்' என்கிற தேசிய இனவுணர்வைப் பெறுவோம்!.

மறக்க முடியாத இமானுவேல் சேகரன்-வீடியோ

இவ்வாறு நாம் தமிழர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Naam Tamilar party to observe Immanuvel Sekaran death anniversary on Monday.
Please Wait while comments are loading...