For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பாராசூட்டில் பறந்த நாகை மாவட்ட கலெக்டர்

By Siva
Google Oneindia Tamil News

நாகை: தேர்தலில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நாகை மாவட்ட கலெக்டர் எஸ். பழிச்சாமி பாரா கிளைடிங் செய்துள்ளார்.

தேர்தலில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பிரபலங்களை வைத்து குறும்படங்கள் வெளியிடுவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த நாகை மாவட்ட கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான எஸ். பழனிச்சாமி நாகை கடற்கரையில் பாரா கிளைடிங் செய்தார். அதாவது பாராசூட்டில் பறந்தார். அப்போது கடற்கரையில் மக்களை வாக்களிக்க வலியுறுத்தி பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

இது குறித்து பழனிச்சாமி கூறுகையில்,

வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே நான் பாரா கிளைடிங் செய்தேன். வேதாரண்யம் மற்றும் மயிலாடுதுறையிலும் பாராகிளைடிங் நிகழ்ச்சி நடத்தப்படும். அந்த நிகழ்ச்சிகளில் பொது மக்கள், கல்லூரி மாணவர்கள் பங்கேற்க வேண்டும்.

இது தவிர தெருவுக்கு தெரு கூட்டங்கள், நாடகங்கள் போடப்படும். மேலும் மனித சங்கிலி அமைத்தும், பேரணி நடத்தியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றார்.

நாகை கடற்கரையில் கலெக்டர் தவிர்த்து பள்ளி, கல்லூரி மாணவர்களும் பாரா கிளைடிங் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
As part of efforts to increase awareness among voters on the importance of exercising their franchise without fail, Nagapattinam Collector and District Election Officer S Palanisami on Thursday went on a paragliding sortie at the beach in Nagapattinam.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X