நடிகர் கமலுக்கு ஓபிஎஸ் அணி நத்தம் விஸ்வநாதன் ஆதரவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: நடிகர் கமல்ஹாசனுக்கு கருத்துச் சொல்ல உரிமை உள்ளது என முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் திண்டுக்கல்லில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஜனநாயகத்திலே இந்திய குடிமகனாக இருக்க கூடிய யாருக்கும்மே ஒரு கருத்து சொல்ற சுதந்திரம் உரிமை உண்டு. அதை யாரும் தடுக்க முடியாது.

natham viswanathan comment about kamal hassan

அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன் தகுதி உடையவர், உரிமையும் உள்ளவர். ஆட்சியாளருக்கு சகிப்பு தன்மை வேண்டும், சகிப்பு தன்மை இல்லாவிடில் ஒரு வெற்றிகரமான அரசை நடத்த முடியாது. அமைச்சர்கள் நடந்து கொள்வது நாகரீகமான நடைமுறை அல்ல. தகுதி அறிந்து அமைச்சர்கள் பேச வேண்டும்.

சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டிக்கு உரிய மரியாதை ஓபிஎஸ் அணியில் வழங்கபட்டது. அவரை மதிக்கவில்லை என்று சொல்வது ஒரு கற்பனையான குற்றசாட்டு. ஆறுகுட்டி தொடர்ந்து எங்களுடன் இணைந்து செயல்படுவார் என நம்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Former minister natham viswanathan comment about kamal hassan.
Please Wait while comments are loading...