பள்ளிப்பருவத்திலேயே சேலை திருடிய நகை கொள்ளையன் நாதுராம்- சுவாரஸ்ய தகவல்

Posted By:
Subscribe to Oneindia Tamil
  கொள்ளையன் நாதுராம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்- வீடியோ

  சென்னை: பள்ளிப்பருவத்திலேயே சேலை மற்றும் சிறு, சிறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நாதுராம் தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் திட்டமிட்டு நகைக்கடைகளில் துளையிட்டு கிலோ கணக்கில் தங்க நகைகளை கொள்ளையடித்து வந்தது தெரியவந்துள்ளது.

  சென்னை கொளத்தூரில் நகை கடையில் 3.5 கிலோ தங்கம், 4 கிலோ வெள்ளி ஆகியவற்றை கொள்ளையடித்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த நாதுராம்,28, தினேஷ் சவுத்ரி ,20 மற்றும் பக்தாராம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

  இந்த கொள்ளையனை கைது செய்ய சென்ற போது இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்டார். இதனையடுத்து தனிப்படை போலீசார் மீண்டும் தேடிச்சென்று கைது செய்தனர். கைதான மூன்று கொள்ளையர்களும் ராஜஸ்தானில் இருந்து கடந்த 26ம் தேதி சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு 10 நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டது.

  நாதுராம் கைது

  நாதுராம் கைது

  அதைதொடர்ந்து நாதுராம், தினேஷ் சவுத்ரி, பக்தாராம் ஆகியோரை போலீசார் அரும்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் நாதுராம் கொடுத்த தகவல் அடிப்படையில் நகைகள் மீட்கப்பட்டன. அதைதொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பல சுவாரஸ்ய தகவல்கள் வெளியானது.

  சேலை திருடிய நாதுராம்

  சேலை திருடிய நாதுராம்

  ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நாதுராம், சிறுவயது முதலே திருட்டுத் தொழிலில் ஈடுபட்டுவந்துள்ளார். 12 வயதான நாதுராம், சூரத்தில் சேலைத் திருடிய வழக்கில் போலீஸிடம் சிக்கினார். அந்தவழக்கில் சிறைக்குச் சென்ற நாதுராம், தொடர்ந்து திருட்டு, கொள்ளை, வழிப்பறி, அடிதடி எனப் பல்வேறு வழக்குகளில் கைதாகி சிறைக்குச் சென்றுள்ளார்.

  நாதுராம் மீது வழக்கு

  நாதுராம் மீது வழக்கு

  கடந்த 2008ம் ஆண்டு முதல் சேலை மற்றும் சிறு, சிறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளான் நாதுராம். தனது நண்பர்களுடன் சேர்ந்து தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் திட்டமிட்டு நகைக்கடைகளை தேர்வு செய்து சுவரை துளையிட்டு கிலோ கணக்கில் தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளான்.

  நகைகள் கொள்ளை

  நகைகள் கொள்ளை

  நகைக் கடை இருக்கும் கட்டிடம் பகுதியில் வாடகைக்குப் பிடித்து துளையிட்டு கொள்ளையிட்டுள்ளான். கட்டிடம் உடைக்கப்படும் சத்தம் கேட்டு யாராவது விசாரணை நடத்தினால் அதற்கு எதையாவது சொல்லி சமாளித்து விடுவானாம். ஆட்கள் இல்லாத நேரம் பார்த்து நகைகளை கொள்ளையடித்து விடுவானாம்.

  சூரத் போலீசார்

  சூரத் போலீசார்


  கொள்ளையடித்த நகைகளை விற்பனை செய்து அதில் கிடைத்த வருமானத்தை வைத்து தனது சொந்த மாநிலமான ராஜஸ்தானில் நிலம் மற்றும் வீடுகளை கட்டி வசதியான வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளான்
  கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் நாக்பூர் மற்றும் சூரத் போலீசார் நாதுராமை குண்டர் சட்டத்தில் கைது செய்ததும் தெரியவந்தது.

  10 கிலோ நகைக் கொள்ளை

  10 கிலோ நகைக் கொள்ளை

  பெங்களூரில் உள்ள நகைக்கடையில் 10 கிலோவுக்கு மேல் நகைகளைக் கொள்ளையடித்த நாதுராம், அந்த நகைகளையும் விற்று சொகுசாக வாழ்ந்துள்ளார். எப்போதும் டிப்டாப்பாக உடையணிந்து வரும் நாதுராம் விமானத்தில் வந்து திருடிவிட்டு தப்பி செல்வது என ஹைடெக் கிரிமினலாக வலம் வந்துள்ளான்.

  துப்பாக்கியுடன் போட்டோ

  துப்பாக்கியுடன் போட்டோ

  கொளத்தூர் கொள்ளைச் சம்பவத்தில் நாதுராமிக்கு, பக்தாராம் என்பவர் உதவியுள்ளார். நகைகளை கொள்ளையடித்தப்பிறகு திருப்பதி வழியாக, பெங்களூரு சென்று சொந்த மாநிலத்துக்குச் சென்றுள்ளனர். கொள்ளையடித்த நகைகளை விற்ற நாதுராம், அதில் சொகுசுக் கார் மற்றும் துப்பாக்கி வாங்கியுள்ளார். அந்தத் துப்பாக்கியுடன் போட்டோவை ஃபேஸ்புக்கில் போட்டு சிக்கிக் கொண்டான் நாதுராம்.

  உண்மையை கக்கிய நாதுராம்

  உண்மையை கக்கிய நாதுராம்

  நாதுராம் கோஷ்டியினரை 10 நாட்கள் காவலில் விசாரணைக்காக எடுத்தனர்.கொளத்தூர் கொள்ளை தொடர்பான அனைத்து தகவல்களையும் 6 நாள் விசாரணையிலேயே நாதுராம், தினேஷ் சவுத்ரி, பக்தாராமிடம் வாக்கு மூலமாக பெறப்பட்டதால் ராஜமங்கலம் போலீசார் நேற்று எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட் கோபிநாத் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அதை தொடர்ந்து மாஜிஸ்திரேட் கோபிநாத், நாதுராம் உட்பட 3 பேரையும் புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

  வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Rajamangalam police inquiry Nathuram and his accomplices Dinesh Chowdhary, 21, and Bagdaram, 23, to the Central Prison, Puzhal, after producing them before a magistrate court.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற