For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நீட்: தேர்வறை மாற்றம், கடினமான விதிமுறை எதிரொலி.. 5000 தமிழ் மாணவர்கள் தேர்வெழுதவில்லை!

நீட் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்களில் மொத்தமாக தமிழகத்தில் இருந்து மட்டும் 5000 மாணவர்கள் தேர்வெழுதவில்லை என்று சிபிஎஸ்இ வட்டாரங்கள் தெரிவித்து இருக்கிறது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

Recommended Video

    நீட் தேர்வு எழுத பெங்களூரில் சுவர் ஏறி குதித்த மாணவிகள்!-வீடியோ

    சென்னை: நீட் தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்களில் மொத்தமாக தமிழகத்தில் இருந்து மட்டும் 5000 மாணவர்கள் தேர்வெழுதவில்லை என்று சிபிஎஸ்இ வட்டாரங்கள் தெரிவித்து இருக்கிறது.

    இந்த முறை நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் சிலருக்கு வடஇந்திய மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ராஜஸ்தான் , கேரளா, வடகிழக்கு மாநிலங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது. இவர்களுக்கு மோசமான கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

    NEET: Amidst heavy rules, 5000 plus students from TN didnt write the exam

    அதேபோல் வெளிமாநிலங்களிலும் இந்த மாதிரியான மோசமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதனால் மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி இருந்தனர். மிக அதிக தூரத்தில் தேர்வு மையங்கள் அமைத்ததோடு மட்டுமில்லாமல், நிறைய கட்டுப்பாடுகள், மோசமான விதிமுறைகளும் விதிக்கப்பட்டது.

    இதனால் சில மாணவர்கள் தேர்வு அறைக்கு வந்தும் கூட தேர்வெழுத முடியாமல் போனது. இந்த நிலையில் தற்போது எத்தனை மாணவர்கள் தேர்வெழுதவில்லை என்ற விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி தமிழகத்தில் இருந்து மொத்தம் 5000 மாணவர்கள் நீட் தேர்வெழுதவில்லை என்று சிபிஎஸ்இ வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

    தமிழகத்தில் 1,07,430 பேர் விண்ணப்பித்த நிலையில், 5000 பேர் பங்கேற்கவில்லை. இதில் ராஜஸ்தான் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் தேர்வறை ஒதுக்கப்பட்ட மாணவர்கள்தான் தேர்வெழுதவில்லை என்று கூறப்படுகிறது. கேரளாவில் அறை ஒதுக்கப்பட்ட சில மாணவர்களும் தேர்வெழுதவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

    மாநில வாரியாக, தேர்வறை வாரியாக, பாடத்திட்ட வாரியாக இன்னும் விவரம் வெளியாகவில்லை. இதுகுறித்த விவரங்களை சிபிஎஸ்இ விரைவில் வெளியிடும்.

    English summary
    NEET: Amidst heavy rules and long distance centers, 5000 plus students out of 1,07,430 students, from Tamil Nadu didn't write the exam according to the CBSE sources.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X