For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் 'நீட்' தேர்வு நடத்தப்பட வேண்டுமாம் - மாணவர்களுக்கு நல்லதாம்... சொல்கிறார் தமிழிசை

தமிழ்நாட்டில் மருத்துவ நுழைவுத் தேர்வான 'நீட்' தேர்வு நடத்தப்பட வேண்டும், அதுதான் மாணவர்களின் நலனுக்கு உகந்தது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறினார்.

By Suganthi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் அனைத்து கட்சியினரும் ஒரே குரலில் 'நீட்' வேண்டாம் என கூறும்போது தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:

நீட் தேர்வு குறித்து மாணவர்கள் அச்சப்படத் தேவையில்லை. கிராமப்புற மாணவர்களுக்கும் பயனளிக்கும் முறையாகத்தான் இருக்கும்.

Neet exam should be conducted in Tamilnadu said tamilisai

ஏனென்றால், நான் ஒரு மருத்துவர். அதனால் தான் கூறுகிறேன். தமிழகத்தில் நீட் தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும். அதுதான் மாணவர்களின் எதிர்காலத்துக்கு நல்லது. இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

முன்னதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை மத்திய அமைச்சர் பிகாஷ் ஜவடேகர் சந்தித்தார். அப்போது அவர், தமிழகத்துக்கு நீட் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

English summary
NEET exam should be conducted in Tamilnadu, it is good for students' future told Tamilnadu Bjp leaded Tamilisai
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X