For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு: சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் மாணவர்கள் மறியல் போராட்டம்

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் மாணவர்கள் மறியல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் மாணவர்கள் மறியல் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

நீட் தேர்வு காரணமாக தமிழகத்தில் இதுவரை இரண்டு மாணவிகள் மரணம் அடைந்துள்ளனர். சென்று வருடம் அனிதாவும், இந்த வருடம் பிரதீபாவும் நீட் கொடூரத்தால் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளனர். இதனால் நாளுக்கு நாள் நீட்டிற்கு எதிராக மக்கள் குரல் கொடுக்க தொடங்கி இருக்கிறார்கள்.

NEET Killings: Students protesting against the cruel exam in Chennai

நீட்டுக்கு எதிராக போராட்டம் நடக்காத வகையில் தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. இந்த நிலையில் நீட்டிற்கு எதிராக மீண்டும் போராட்டம் செய்ய மாணவர்கள் முடிவெடுத்துள்ளனர்.

தற்போது நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் மாணவர்கள் மறியல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பல்வேறு மாணவர் அமைப்புகள் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதனால் செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் இருந்து எக்மோர், மெரினா செல்லும் ரயில்களும், அதற்கு எதிர் திசையில் செல்லும் ரயில்களும் நிறுத்தப்பட்டு உள்ளது. போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீஸ் குவிக்கப்பட்டு வருகிறது.

English summary
NEET Killings: Students protesting against the cruel exam in Chennai Park Railway station.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X