For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் மழையே இல்லாமல் வெள்ளம்.. பாவமா? புண்ணியமா? சாபகேடா?

தமிழகத்தில் மழை பெய்யாமலேயே ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் மழை பெய்யாமலேயே ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது குறித்து நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் மழை பெய்யாமலேயே பல ஆறுகளிலும் ஆற்றங்கரையோரங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதனால் ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.

திருச்சி, தஞ்சை, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கரைபுரண்டோடும் காவிரி நீர் கரையோர கிராமங்களில் புகுந்துள்ளது. இதுகுறித்து நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வைகையில் வறட்சி

ஒரே மாநிலத்தில் கூட நாம் நீரைப்பங்கிட முயற்சி செய்யவில்லையென்றால் பக்கத்து மாநிலங்களிடம் சண்டைப்போடுவது எதற்கு?

நம்மள தாக்க வருது

திருச்சி உறையூரில்
காவிரி வெள்ளநீர் புகுந்தது
மக்கள் வெளியேற்றம்
எல்லாரும் பாதுக்காப்பான இடத்த நோக்கி ஓடுங்க!
அது நம்மள தாக்க வருது!

மழையே இல்லையாம்

அண்ணே #காவிரி'ல தண்ணி வருதுன்றாய்க.. #தாமிரபரணி'ல வருதுன்றாய்ங்க.. #பாலாறு'ல வருதுன்றாய்ங்க.. அதுக்கு பக்கத்து ஆறுல வருதுன்றாய்ங்க..
ஆனா #வைகை'ல மட்டும் தண்ணியே வரல மழையே இல்லையாம்

தனக்கு மிஞ்சினால் தான்

காவிரி
பவானி
தாமிரபரணி கரையோரம்
ஆயிரக்கணக்கான
தமிழக மக்கள், விவசாயிகள்
வீடுகள், பயிரிட்டுள்ள
நிலங்களில்
கூடுதலாக
திறந்த உபரி நீர் புகுந்தும்
கடைமடையில் இன்னமும்
நீர் ஏறாமல்
நஷ்டமடைந்து,
செய்வதறியாது
திகைத்துப் போயுள்ளனர்.
அவங்களுக்கு உதவுங்க!
தனக்கு மிஞ்சினால் தான் தானம்!

எப்போ வந்துச்சு?

பள்ளிப்பாளையத்திலும் சரி, திருச்சிலயும் சரி,மக்கள் காவிரி,கொள்ளிடத்த கண்காட்சி மாதிரி பாக்குறாங்க.கடைசியா எப்போ இவ்ளோ தண்ணி வந்துச்சு?

தலைமுறை தவறு

ஆக்கிரமிக்கபட்ட தன் எல்லைகளை தானே தேடி காவிரி ! கண்ணகியாக !!
ஈவ்டீசிங் செய்தது நம் தலைமுறை தவறு !!

அரசியல் செய்யாதே

என்னை வைத்து அரிசி உண்டாக்கு !
அரசியல் செய்யாதே -காவிரி இன்று வெள்(ள)ளை அறிக்கை தாக்கல் செய்கிறது !!

பாவமா,புண்ணியமா, சாபகேடா?

கனமழை வெள்ளம்
அடிச்சிகிட்டு போவூது!
ஆனால் தமிழ் நாட்டில
மட்டும்தான் மழையே
பெய்யாமல் வெள்ளம்
அடிச்சுகிட்டு போவூது.
தாமிரவருணி யல வெள்ளம்
காவேரியில் வெள்ளம்
பல கிராமங்களில் தண்ணீர்
புகுந்தது.
செய்த பாவமா / புண்ணியமா /
சாபகேடா?

கண்ணீர் தானடி!

கேரளா, கர்நாடகா கனமழை, வெள்ளம், அணைகளிலிருந்து தமிழகத்திற்கு
தண்ணீர் திறப்பாம்...
ஒரு லட்சம்
ரெண்டு லட்சம்
3 லட்சம் கன அடி
ஆனால்,
தமிழக விவசாய நிலத்தில் தண்ணீர் இன்றி
கண்ணீர் தானடி!

English summary
Netizens sharing their views on Tamil Nadu flood. Tamil Nadu rivers flooded.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X