பாஜகவை நோட்டாவால் குழி தோண்டி புதைத்த மண்... எச். ராஜாவை கதற விடும் நெட்டிசன்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் திராவிட மண் என்று சில வார்த்தைப் பிரயோகங்கள் மூலம் சொல்லி, இந்த மண்ணில் ஆன்மீக அரசியல் சபாஷ் என்று பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா டுவீட்டியதற்கு பலரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். தமிழகத்தில் பாஜகவின் நிலை என்ன என்பதை சொல்லி பலரும் தெறிக்கும் பதில்களை எச். ராஜாவிற்கு போட்டு வருகின்றனர்.

பாஜகவின் தேசிய செயலாளர் எச். ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில் ரஜினியின் ஆன்மீக அரசியலை குறிப்பிட்டு ஒரு கருத்தை பதிவிட்டிருந்தார். அதில் "இது பெரியார் மண், பிள்ளையாரை உடைத்த மண், ராமர் படத்திற்கு செருப்பு மாலை போட்ட மண், அடியேமீனாக்ஷி உனக்கு எதற்கு வைர மூக்குத்தி, கழட்டடி கள்ளி என்ற மண், தில்லை நடராஜனையும், திருவரங்க நாதனையும் பீரங்கி வாயில் வைத்து பிளக்கும் நாள் பொன்னாள் என்ற மண் ஆனால் இங்கு ஆன்மீக அரசியல். சபாஷ்" என்று போட்டிருந்தார்.

எச். ராஜாவின் இந்த கருத்துக்கு பலரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். அவருடைய டுவீட்டுக்கு உடனுக்குடன் தெறிக்கும் பதில்களை போட்டு அவரைக் கதற விட்டு வருகின்றனர்.

ஆன்மீக அரசியல்

ஆன்மிக அரசியல், அது காவியா இருந்தா என்ன? ரஜினியா இருந்தா என்ன பிஜேபியா இருந்தா என்ன? என்று கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

ஆரம்பிக்கவே இல்லை

ஆன்மீக அரசியல் இன்னும் ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள அலம்பலா. ஆர்.கே நகர் ஞாபகம் இருக்கா? அந்த கைகக்கு கீழயோ பின்னாடியோ தாமரை இருந்துச்சு அப்புறம் நோட்டோ கூடதான் போட்டி போடனும் என்று டுவீட்டியுள்ளார் இவர்.

பதில் பட்டியல்

திராவிட மண் என்பதற்கு ராஜா பட்டியல் போட்டது போல இந்த நெட்டிசனும் ஒரு பட்டியலை அவருக்கு போட்டுள்ளார். நோட்டா டாட்டா காட்டிய மண்,
#சாரணர் இயக்க தேர்தலில் கூட ஜெயிக்க விடாத மண், பசு அரசியல் செய்ய விடாத மண், பகுத்தறியும் மண் என்று பதிலுக்கு போட்டுள்ளார்.

பாஜவை நோட்டாவால் புதைத்த மண்

19 மாநிலங்களில் ஆட்சியிலிருக்கும் கட்சியை நோட்டாவால் குழி தோண்டி புதைத்த மண் என்பதையும் சேர்த்துக் கொள்ளுங்கள் என்பது போல இவர் டுவீட்டியுள்ளார். ராஜா இது திராவிட மண் என்பதற்கான ஒரு பட்டியலை தனது டுவீட்டில் போட்டிருந்ததற்கு பதிலடியாக இவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Netizens trolling BJP National secretary H. Raja for his comparision of Rajinikanth's spiritual politics with that of Tamilnadu's Dravidian politics.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற