For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாட்ஸ் ஆப் வாசிகளே.. இதை படிங்கப்பா முதல்ல!

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: சமூக வலைதளங்களில் ஒன்றான வாட்ஸ் ஆப் பயன்பாட்டாளர்களுக்காக புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வாட்ஸ் ஆப், டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்டவை உடனுக்குடன் செய்திகளை பரிமாறிக் கொள்ள உதவி வருகிறது. இதில் வீடியோ, ஆடியோ, புகைப்படம், டெக்ஸ்ட் உள்ளிட்டவைகள் பதிவிடப்படுகின்றன.

இவற்றைப் பயன்படுத்தாதவர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இருப்பர் என்ற அளவுக்கு இளைஞர்கள், பெரியவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

 டுவிட்டரில் எழுத்துகள் அதிகம் பதிவு

டுவிட்டரில் எழுத்துகள் அதிகம் பதிவு

அந்தந்த நிறுவனங்கள் இதற்கென கூடுதல் வசதிகளை அவ்வப்போது அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் டுவிட்டரில் 140 எழுத்துகள் மட்டுமே டைப் செய்ய முடிந்த நிலையில் தற்போது அந்த நிறுவனம் அதை இரட்டிப்பாக்கியது.

 மொபைலிலிருந்து அழிக்கலாம்

மொபைலிலிருந்து அழிக்கலாம்

அதுபோல் வாட்ஸ் ஆப்பிலும் ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வாட்ஸ் ஆப்பில் நாம் அனுப்பிய செய்திகளை நமது மொபைல்களில் இருந்து மட்டுமே அழிக்க முடியும். ஆனால் தற்போது மற்றவர்களுக்கு நாம் அனுப்பிய தேவையில்லாத செய்தி, தவறுதலாக அனுப்பப்பட்ட செய்திகளையும் அனுப்புவர்களால் அழிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

 நீக்கப்பட்டதும் காண்பிக்கும்

நீக்கப்பட்டதும் காண்பிக்கும்

அதற்கு நாம் எந்த செய்தியை அழிக்க விரும்புகிறோமோ அதை தேர்வு செய்து டெலிட் ஃபார் எவ்ரிஒன் என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் போதும். நாம் அனுப்பிய செய்தி மற்றவர்கள் மொபைலிலிருந்தும் டெலிட் ஆகிவிடும். மேலும் குறிப்பிட்ட செய்தி நீக்கப்பட்டுவிட்டதாக பெறுபவர்களுக்கு காண்பிக்கும்.

 அப்டேடட் வெர்சன்

அப்டேடட் வெர்சன்

ஆனால் செய்தியை அனுப்பிய 7 நிமிடங்களுக்குள் மட்டுமே அதை நம்மால் டெலிட் செய்ய முடியும். இந்த வசதியை பெற வாட்ஸ் ஆப்பின் புதிய வெர்சனுக்கேற்ப அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.

English summary
We can delete the messages which was sent wrongly to a group or individual from our mobile itself. Whats App has introduced this facility. To avail this , user should update the new version.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X