பேடிஎம்க்கு போட்டியாகக் களம் இறங்கும் வாட்ஸ் ஆப்.. இனி பணமும் டிரான்ஸ்பர் செய்யலாம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பேஸ்புக்கின் கைக்குச் சென்ற பின் வாட்ஸ் ஆப்பில் தொடர்ந்து பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. வரிசையாக அந்த அப்ளிகேஷனில் பல அப்டேட்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

ஏற்கனவே வீடியோ கால், வீடியோ ஸ்டேட்ஸ், லைவ் லொகேஷன் ஷேரிங் எனப் பல வசதிகள் வாட்ஸ் ஆப் புதிய அப்டேட்டில் கொண்டு வரப்பட்டு இருக்கிறது. மேலும் சில நாட்களுக்கு முன் அனுப்பிய மெசேஜை திரும்பப் பெறும் வசதியும் கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில் இன்னும் சில வாரங்களில் வாட்ஸ் ஆப் மூலம் பணம் செலுத்தம் வசதி கொண்டு வரப்பட உள்ளது.

பேடிஎம் ஆப்

பேடிஎம் ஆப்

தற்போது பேடிஎம் ஆப் மிகவும் பிரபலமாக இருக்கிறது. பலரும் கடைகளில், ஹோட்டலில் இதன் மூலம் பணம் செலுத்துகிறார்கள். இது பயன்படுத்தவும் எளிதாக இருக்கிறது. எனவே இது அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது.

என்ன

என்ன

ஆனால் இந்த அப்ளிகேஷனை இதற்கு மட்டுமே பயன்படுத்த முடியும். இந்த நிலையில் ஏற்கனவே பல வசதிகள் கொண்டு இருக்கும் வாட்ஸ் ஆப் இந்த வசதியையும் பெற உள்ளது. இதன் மூலம் இனி நாம் பணம் கட்ட, பில் கொடுக்க முடியும்.

எப்படிச் செய்யலாம்

எப்படிச் செய்யலாம்

நாம் வாட்ஸ் ஆப்பில் புகைப்படம், வீடியோ எப்படி அனுப்புவோமோ அதே இடத்தில் இந்த பணம் அனுப்பும் ஆப்ஷனும் இருக்கும். அதை கிளிக் செய்து எளிதாக அனுப்பலாம். பணம் அனுப்பக் கூடியவரும், பணம் பெற கூடியவரும் அதற்கு என்று அக்கவுண்ட் உருவாக்க வேண்டும்.

எப்போது

எப்போது

இந்த அப்டேட் இப்போதே வாட்ஸ் ஆப் பீட்டா வர்ஷனில் வந்துவிட்டது. இப்போது இதன் சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது. இன்னும் சில வாரங்களில் வாட்ஸ் ஆப்பில் வந்துவிடும் என்று கூறப்பட்டுள்ளது.

பணம் எடுப்பார்கள்

பணம் எடுப்பார்கள்

ஆனால் இந்த வசதி மூலம் வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு பணமும் வரும் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு முறை நாம் பணம் அனுப்பும் போதும் குறைந்தபட்ச தொகை எடுக்கப்படும். இதனால் இலவசமாக செயல்பட்ட இந்த ஆப் பணம் பெறும் அப்ளிகேஷனாக மாறும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
WhatsApp has confirmed that the group voice calls will be there in its upcoming update. It also allowed you to see Youtube video in new update. Now new update in WhatsApp will have payment option as per the source.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற