For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நெல்லை பல்கலைகழகத்தின் புதிய துணைவேந்தராக கிருஷ்ணன் பாஸ்கர் பொறுப்பேற்பு

Google Oneindia Tamil News

நெல்லை: நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் புதிய துணைவேந்தராக கிருஷ்ணன் பாஸ்கர் பொறுப்பேற்றுள்ளார்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் கடந்த சில மாதங்களாக துணைவேந்தர் பதவி காலியாக இருந்து வந்தது. இதனால் பல்கலைகழகத்தில் பல முக்கிய பணிகள் முடங்கின. இதையடுத்து புதிய துணை வேந்தரை நியமிக்கும் பணி முழு வீச்சில் நடந்து வந்தது.

இந்நிலையில் திடீரென புதிய துணைவேந்தராக கிருஷ்ணன் பாஸ்கர் என்பவர் பொறுப்பேற்றுள்ளார். இவர் திருவள்ளூர் மாவட்டம், கோட்டைகுப்பம் கிராமத்தில் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். அண்ணா பல்கலைகழகத்தில் இயற்பியல் பாடத்தில் முதுநிலையும், முனைவர் பட்டமும் பெற்றவர்.

New V-C for MSU

30 ஆண்டுக்ள் ஆய்வுத்துறையில் அனுபவம் மிக்க இவரை நெல்லை பல்கலை கழகத்தின் புதிய துணைவேந்தராக தமிழக அரசு நியமித்துள்ளது.

துணைவேந்தராக பொறுப்பேற்ற பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பாஸ்கர் கூறியதாவது:-

வீரபாண்டிய கட்டபொம்மன், வஉசி சிதம்பரனார் ஆகிய வரலாற்று சிறப்பு மிக்க தலைவர்கள் வாழ்ந்த இந்த நெல்லை மண்ணில் சுந்தரனார் பெயரில் இயங்கும் இந்தகல்லூரியில் துணை வேந்தராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததற்காக மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன்.

உயர்கல்வியை மேம்படுத்த அடிப்படை வசதிகள் அவசியம். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். வெளிநாடுகளில் கற்கும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. இதற்காக கல்வி கடன் மட்டும் பல லட்சம் அமெரிக்க டாலர் அங்கு செல்கிறது. இதன் மதிப்பு இந்திய ரூபாயில் ரூ.8 கோடி ஆகும்.

இதில் பாதி கட்டணத்தை நிர்ணயித்து அந்த கல்வி வசதியை ஏற்படுத்தினால் அமெரிக்க டாலர் நமக்கே கிடைக்கும். மேலும் யோகா பாடம் சேர்க்கவும், 23 ஆண்டுகள் பணியாற்றியவர்களை பணி நிரந்தரம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விமர்சனத்திற்கு மத்தியில்

துணைவேந்தராகப் பதவியேற்றுள்ள பாஸ்கரின் நியமனம் குறித்து சமீபத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடுமையாக விமர்சித்திருந்தார். இவரது நியமனத்தில் பணம் கைமாறியுள்ளதாகவும், ஆளுநரின் தலையீடு இருந்ததாகவும் அவர் பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந்தார் என்பது நினைவிருக்கலாம். இந்தப் பின்னணியில் பாஸ்கர் அவசரம் அவசரமாக பதவியேற்றுள்ளார். மேலும் தனது குடும்பத்துடன் போய் முதல்வர் ஜெயலலிதாவையும் அவர் முன்னதாக சந்தித்து ஆசியும் பெற்றார்.

English summary
Former Director of Crystal Growth Centre, Anna University, Chennai, Krishnan Baskar (54), assumed office as the new Vice-Chancellor of Manonmaniam Sundaranar University here on Tuesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X