"மாயாவி" பட துணை நடிகை விஷ்ணுபிரியா தந்தை கொலை வழக்கு! 9 பேர் கைது! கொடைக்கானலில் நடந்தது என்ன?
கொடைக்கானல்: "மாயாவி" பட துணை நடிகை விஷ்ணுபிரியாவின் தந்தை கொலை செய்யப்பட்ட வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். விஷ்ணுப்ரியாவின் தந்தை கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் கொடைக்கானலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'மாயாவி' படத்தில் 'கடவுள் தந்த அழகிய வாழ்வு' பாடலில் மாற்றுத்திறனாளியாக நடித்து புகழ் பெற்றவர் விஷ்ணுப்ரியா.

இவரது தந்தை சூரியநாராயணன் (73) திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் கோயில் அருகே தனது சொந்த பங்களாவில் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
சம்பவம் கடந்த பிப்ரவரி 20-ஆம் தேதி இரவு நடந்ததாக தெரிகிறது. ஐந்து பேர் சுற்றுலாப் பயணிகளைப் போல பங்களாவில் தங்கியிருந்தனர். இந்த பங்களாின் அறைகள் உரிய அனுமதியின்றி சுற்றுலா பயணிகளுக்கு வாடகைக்கு விடப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த சுற்றுலா பயணிகள் கடந்த 20ஆம் தேதி இரவில் பங்களா ஊழியர்களான ஆறுமுகம் மற்றும் முரளியை தாக்கி துணியால் கட்டிப் போட்டனர். பின்னர் சூரியநாராயணனை நாற்காலியில் அமர வைத்து முகம் மற்றும் உடல் முழுவதும் டேப்பால் சுற்றி கட்டி மூச்சுத் திணறச் செய்து கொலை செய்துள்ளனர்.
இதையடுத்து அவரது தங்கச் சங்கிலி, மோதிரம், வீட்டில் இருந்த சிசிடிவி கேமரா மற்றும் அதன் ஹார்டு டிஸ்க் ஆகியவற்றை திருடி தப்பியோடியுள்ளனர்.
போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், சொத்து ஆவணங்கள், நகைகள் மற்றும் பணம் தொடர்பான தகராறு கொலைக்கு காரணமாக இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. இதனிடையே 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் சென்னை, அரக்கோணம், திருவள்ளூர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், மோசடி மற்றும் ஹவாலா தொழிலில் ஈடுபட்டவர்கள் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சூரியநாராயணன் பங்களாவை அனுமதியின்றி சுற்றுலாப் பயணிகளுக்கு வாடகைக்கு விட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஊழியர்கள் ஆறுமுகம் மற்றும் முரளி தாக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தேனி எஸ்பி டாக்டர் சினேகா பிரியா விசாரணையை மேற்பார்வையிடுகிறார். மேலும், 2018-ஆம் ஆண்டு விஷ்ணுப்ரியாவின் காதலர் பிரபாகரன் கொலை வழக்கில் சூரியநாராயணன் குற்றம்சாட்டப்பட்டிருந்ததும் தற்போது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
அந்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த கொலை பழிவாங்கல் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. போலீசார் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல்












Click it and Unblock the Notifications