For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பிறகே பட்ஜெட் .. திமுக கோரிக்கை புறக்கணிப்பு

தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடரின்போது சபாநாயகர் தனபால் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை இன்றே கொண்டு வர திமுக வலியுறுத்தியது.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை திமுக கொண்டு வர திமுக வலியுறுத்தியது.

கடந்த பிப்ரவரி மாதம் 18-ஆம் தேதி தமிழக சட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். அதற்கு முன்னதாக ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று சபாநாயகர் தனபாலிடம் திமுக கோரியது. அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.

No Confidence motion against Speaker in TN Budget session

இதைத் தொடர்ந்து அவையில் கடும் அமளி ஏற்பட்டது. தனபாலுக்கும், திமுக உறுப்பினர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் மூண்டது. இதனால் மைக்குகள் உடைக்கப்பட்டு திமுக உறுப்பினர்கள் குண்டுகட்டாக அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.

தனபாலுடனான தகராறின்போது மு.க.ஸ்டாலினின் சட்டை்க் கிழிந்ததாக கூறப்பட்டது. பின்னர் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு எடப்பாடிக்கு 122 எம்எல்ஏ-க்கள் ஆதரவு அளித்ததாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடியது. முதலில் சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை இன்றே கொண்டு வர வேண்டும் என திமுக வலியுறுத்தியது. ஆனால் உடனடியாக அதை எடுக்க முடியாது. ஆனால், நம்பிக்கையில்லா தீர்மானத்தை கூட்டத்தொடரின் இன்னொரு நாளில் நான் எடுத்துக்கொள்கிறேன் என்று சபாநாயகர் தெரிவித்தார். இதன்பிறகே ஜெயக்குமார் பட்ஜெட் தாக்கல் செய்ய முடிந்தது.

English summary
No confidence motion on Speaker Dhanapal demands DMK in TN Budget session. But it will be on debate in this session, says Dhanapal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X