For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் நிலை படுமோசமாக உள்ளது: போராளி நிமல்கா

Google Oneindia Tamil News

சென்னை: போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் நிலை படுமோசமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார் இலங்கை மனித உரிமைகள் போராளி நிமல்கா.

இலங்கை மனித உரிமைகள் போராளியான நிமல்கா பெர்னாண்டோ சொந்த வேலையாக சென்னை வந்துள்ளார். அப்போது இலங்கை தமிழர்கள் நிலை குறித்து செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது :-

துன்பத்தில் வாடும் தமிழர்கள்...

துன்பத்தில் வாடும் தமிழர்கள்...

இலங்கையில் உள்கட்டமைப்பு வசதிகள் வளர்ந்திருக்கின்றன. இலங்கை அரசு மக்களின் தினசரி வாழ்க்கையை மேம்படுத்த முயற்சி எடுக்கவில்லை. இதனால் அரசுக்கு நெருக்கமான ஒரு சிலரைத் தவிர ஒவ்வொரு இலங்கையரும் துன்பத்தில் வாடுகின்றனர்.

பொருளாதார வளர்ச்சி இல்லை...

பொருளாதார வளர்ச்சி இல்லை...

தற்போது இலங்கையில் மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் விலை உயர்ந்துள்ளன. உண்மையான பொருளாதார வளர்ச்சி நடைபெறவே இல்லை.

பெண்கள் நிலை படுமோசம்...

பெண்கள் நிலை படுமோசம்...

போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் நிலை படுமோசமாக உள்ளது. அதிலும் வன்னி போன்ற பகுதிகளில் வாழும் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். பல கிராமங்களில் 80 சதவீத பெண்களே உள்ளனர். அவர்கள் தங்களது கணவர்களுடன் விவசாயத்திலோ, மீன்பிடி தொழிலிலோ உதவி செய்து வாழ்ந்து வந்தவர்கள்.

கேள்விக்குறியான வாழ்வாதாரம்...

கேள்விக்குறியான வாழ்வாதாரம்...

தற்போது அவர்களுக்கான வாழ்வாதாரம் குறித்து அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. விவசாய நிலங்கள் ராணுவத்தின் கையில் உள்ளது. அவர்களால் புதிதாக ஏதும் தொழில் தொடங்கி வாழ வழியில்லை. தெற்கில் வாழும் சிங்கள பெண்ணின் வாழ்வை விட இவர்களது வாழ்க்கை மோசமானது.

நகைகள் அடமானத்தில்...

நகைகள் அடமானத்தில்...

வீட்டில் உள்ள பெண் குழந்தைகளை தனியாக விட்டு வேலைக்கு செல்வது இயலாது. தங்கள் நகைகளை அடமானம் வைத்து தங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.

ஐ.நாவுக்கு கட்டுப்பட வேண்டும்...

ஐ.நாவுக்கு கட்டுப்பட வேண்டும்...

2012-ல், 2013-ல் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலிருந்து இது அடுத்த கட்டமாகும். இது வரை போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்த எந்தவொரு தீர்மானமும் இயற்றப்படவில்லை. ஐ.நா.வில் உறுப்பினராக இருக்கும் இலங்கை ஐ.நா.வின் விதிகளுக்கு கட்டுப்பட வேண்டும்.

மனித உரிமைகள் மீறல்...

மனித உரிமைகள் மீறல்...

இது இலங்கையின் உள்நாட்டு பிரச்சினை மட்டுமில்லை. உலக அளவில் இந்த நூற்றாண்டின் மனித உரிமை மீறல்கள் குறித்த விவகாரம். தற்போது ஆதாரங்கள் வெளிவருகின்றன, அனைவரும் கேள்வி கேட்கிறார்கள். ஐ.நா.வாக இருந்தாலும் தவறு செய்தால் பதில் கூற வேண்டும்.

ஐ,நா சபை மட்டுமே..

ஐ,நா சபை மட்டுமே..

மனித உரிமை சபைக்கு வந்திருக்க வேண்டிய ஐ.நா.வின் வல்லுநர்கள் அறிக்கையை ஐ.நா. செயலாளர் சமர்ப்பிக்கவே இல்லை.ஐ.நா. இப்படி செய்ய நாம் அனுமதிக்கக் கூடாது. உலக அளவில் மனித உரிமை விவகாரங்களை பேச ஐ.நா.வின் மனித உரிமை சபை மட்டுமே இருக்கிறது என்ற நிலையில் அது செயலாக்கம் உள்ளதாக இருக்க வேண்டும்.

சர்வதேச விசாரணை...

சர்வதேச விசாரணை...

அரசுகள் கையில் மனித உரிமை சபையின் செயல்பாடுகளை முடக்கி விடக் கூடாது. இந்த மாதம் சர்வதேச விசாரணை நடத்த தீர்மானம் இயற்றப்படும் என்று நம்புகிறோம்' என இவ்வாறு அந்த பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார்.

English summary
The Srilankan human rights activists Fernando Nimalka has said that the tamil who were affected in the war is in the same condition without any improvement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X