ஆயிரம் தினகரன் வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது - பொதுக்குழுவில் பொங்கிய ஈபிஎஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கூட்டம் நடைபெறாது என சிலர் யோசித்தபோதும் தொண்டர்களின் ஆதரவால் பொதுக்குழு நடந்துள்ளது
ஆயிரம் தினகரன்கள் வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில் அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு இன்று கூடியது. அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்க்கு அனைத்து அதிகாரம் வழங்குதல்,அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கம் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்களுக்கு பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். ஆரம்பம் முதல் இறுதி வரை அவரது பேச்சில் அனல் பறந்தது.

முதல் வெற்றி

முதல் வெற்றி

நடைபெறாது என்று சிலர் நினைத்துக்கொண்டிருந்த பொதுக்குழு தொண்டர்கள் ஆதரவால் நடைபெற்றுள்ளது.பொதுக்குழு கூட்டத்திற்கு நீதிமன்றம் தடை விதிக்காதது நமக்கு கிடைத்த முதல் வெற்றியாகும்.

புதிய வரலாறு

புதிய வரலாறு

அதிமுக அணிகள் இணைந்ததன் மூலம் நாம் புதிய வரலாறு படைந்துள்ளோம். தமிழகத்தில் பிரிந்த கட்சிகள் ஒன்றிணைந்ததாக வரலாறு இல்லை. அந்த வரலாற்றை அதிமுக உடைத்துள்ளது. இரண்டாவது முறையாக தமிழகத்தில் தொடர்ந்து ஆட்சியமைத்த கட்சி அதிமுக.

அதிமுகவை அழிக்க முடியாது

அதிமுகவை அழிக்க முடியாது

ஜெயலலிதா இல்லாத நிலையில் ஒன்றிணைந்த நம்மை யாராலும் பிரிக்க முடியாது. அதிமுகவை அழிக்க நினைத்தது டிடிவி தினகரன் தான். ஓராயிரம் தினகரன் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது. கட்சியில் உறுப்பினரே இல்லாத தினகரனால் நிர்வாகிகளை நீக்க முடியாது

யார் துரோகி

யார் துரோகி

கடந்த 10 ஆண்டுகளாக தினகரன் எங்கே இருந்தார். துரோகத்தால் ஜெயலலிதால் நீக்கப்பட்ட தினகரன் எங்களை துரோகிகள் என்பதா?. ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லம் நினைவிடமாக்கப்படும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
CM EPS has challenged that no one can demolish the ADMK in future

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற