For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எத்தனை சித்துவேலைகள் செய்தாலும் ஜெயலலிதா உருவாக்கிய ஆட்சியை கலைக்க முடியாது.. ஓபிஎஸ் பேச்சு

எத்தனை சித்து வேலைகள் செய்தாலும் ஜெயலலிதா உருவாக்கிய ஆட்சியை கலைக்க முடியாது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சேலம்: எத்தனை சித்துவேலைகள் செய்தாலும் ஜெயலலிதா உருவாக்கிய ஆட்சியை கலைக்க முடியாது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் கருப்பூரில் எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் மாவட்டம் என்பதால் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சியில் பேசிய ஓ.பன்னீர்செல்வம் எம்ஜிஆரை மக்கள் வாத்தியார் என அழைத்ததை நினைவு கூர்ந்தார்.

படங்கள் மூலம் கற்றுக்கொடுத்தார்

படங்கள் மூலம் கற்றுக்கொடுத்தார்

எம்ஜிஆர் தனது திரைப்படங்கள் மூலம் நற்பண்புகளை கற்றுக்கொடுத்தவர் என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார். எம்ஜிஆர் ஆட்சிகாலத்தில்தான் தமிழகத்தில் மறுமலர்ச்சி ஏற்பட்டது என்றும் அவர் கூறினார்.

யாரும் சிதைத்து விட முடியாது

யாரும் சிதைத்து விட முடியாது

தமிழக மக்களின் நலனைக் கெடுக்க சில சுயநலவாதிகள் முயற்சிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார். ஜெயலலிதா விட்டுச் சென்ற பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றி வருகிறார் என்றும் இதனை யாரும் சிதைத்து விட முடியாது என்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

மக்களின் ஒரே ஆயுதம்

மக்களின் ஒரே ஆயுதம்

எத்தனை சித்துவேலைகள் செய்தாலும் ஜெயலலிதா உருவாக்கிய ஆட்சியை கலைக்க முடியாது என்றும் அவர் கூறினார். தமிழகத்தில் தீய சக்திகளை அழிக்க மக்களுக்கு உள்ள ஒரே ஆயுதம் அதிமுக தான் என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார்.

மக்களின் ஆதரவு பெற்ற ஆட்சி

மக்களின் ஆதரவு பெற்ற ஆட்சி

தீய குணம் கொண்டவர்கள் சிலர் ஆட்சியை கலைக்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்., மக்களின் ஆதரவு பெற்ற ஆட்சியை யாராலும் அழிக்க முடியாது என்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

English summary
OPS speaks in MGR birthday that no one can dissolve the govt which is made by Jayalalitha. He said some selfish people trying dissolve the ruling.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X