கோவில்களுக்கு உள்ளே கடைகள் வைக்க தடை.. தமிழக முதல்வர் அதிரடி உத்தரவு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கு உள்ளேயும் சுவரை ஒட்டியும் உள்ள கடைகளை அகற்ற வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கடந்த 2ம் தேதி இரவு தீ விபத்து நிகழ்ந்தது. இதில் வீரவசந்தராயர் மண்டபம் அதிகமாக சேதம் அடைந்தது. இதில் நூற்றுக்கணக்காக புறாக்களும் மடிந்து போனது.

No for shops inside the temple - TN CM

இந்த சம்பவம் பக்தர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால் சில கோவில்களில் தீபம் ஏற்ற தடைவிதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களுக்கு உள்ளேயும் சுவரை ஒட்டியும் உள்ள கடைகளை அகற்ற வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.

மேலும் ''கோவில் விபத்துகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை வேண்டும். அதேபோல் பெரிய கோவில்களில் பாதுகாப்பு நடைமுறையை தணிக்கை செய்ய வேண்டும்'' என்றும் கூறியுள்ளார்.

முக்கியமாக இந்த அறிவிப்பில் உடனே நடவடிக்கை எடுக்க துறை சார்ந்த அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Tamilnadu Chief Minister orders that no for shops inside the temple in Tamilnadu. They also banned not to build shop near the wall of the temple.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற