For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இடதுசாரிகளுக்கு வடசென்னை, நாகை, கோவை? 3 தொகுதி அதிமுக வேட்பாளர்கள் மாறுவார்கள்?

By Mathi
Google Oneindia Tamil News

North Chennai for CPI?
சென்னை: அதிமுக கூட்டணியில் 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை ஜெயலலிதா அறிவித்துள்ள நிலையில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்கப்படும்? எந்தெந்த வேட்பாளர்கள் மாற்றப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

அதிமுகவின் தொகுதிப் பங்கீட்டு குழுவிடம் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 10 தொகுதிகளை குறிப்பிட்டு அதில் 3 தொகுதிகளைப் பெற பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

ஆனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு தொகுதியும், மார்க்சிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வடசென்னை, தென்காசி, சிவகங்கை தொகுதிகளை குறி வைத்து காத்திருக்கிறது.

அனேகம் இதில் தா. பாண்டியனுக்காக வடசென்னை தொகுதி மட்டுமே ஒதுக்கப்படக் கூடும் என கூறப்படுகிறது. அதேபோல் மார்க்சிஸ்ட் கட்சிக்கு நாகை, கோவை தொகுதிகள் ஒதுக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த லோக்சபா தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வடசென்னை, நாகப்பட்டினம், தென்காசி தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

இதனால் வடசென்னை- வெங்கடேஷ் பாபு, தென்காசி- வசந்தி முருகேசன், சிவகங்கை- செந்தில்நாதன் ஆகிய அதிமுக வேட்பாளர்கள் வாபஸ் பெறப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

English summary
The Communist Party of India (CPI), which is part of the AIADMK alliance, may get North Chennai constituency. Also Nagai and Tenkasi constituencies will goes to CPM, sources said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X