For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இதனால் அறிவிப்பது என்னவென்றால், மநகூ கட்சிகளை 1.25 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றது நோட்டா!

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளை விட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

தமிழக சட்டசபை தேர்தலில் தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ், மக்கள் நலக் கூட்டணி படுதோல்வி அடைந்துள்ளது. இந்நிலையில் மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளை விட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளது தெரிய வந்துள்ளது.

இது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறுகையில்,

தேர்தல் முடிவுகள்

தேர்தல் முடிவுகள்

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் பெயர்களை அரசு கெசட்டில் இன்று வெளியிட்ட பிறகு 232 தொகுதிகளுக்கான தேர்தல் நடவடிக்கைகள் முடிந்துவிடும்.

வாக்கு எண்ணிக்கை

வாக்கு எண்ணிக்கை

சில தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தாமதம் ஆனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தபால் வாக்குகளை விட வாக்குகள் வித்தியாசம் குறைவாக இருந்தால் தபால் வாக்குகள் மீண்டும் எண்ணப்படும். இதனால் தான் வாக்கு எண்ணிக்கை தாமதமாகியுள்ளது.

நோட்டா

நோட்டா

தமிழகத்தில் நோட்டாவுக்கு 5 லட்சத்து 56 ஆயிரத்து 580 வாக்குகள் கிடைத்துள்ளது என்று ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். கடலூர் தொகுதியில் பாஜக வேட்பாளர் பி.செல்வத்தை(1,964) விட நோட்டாவுக்கு(2,062) அதிக வாக்குகள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் நலக் கூட்டணி

மக்கள் நலக் கூட்டணி

மதிமுகவுக்கு 3 லட்சத்து 71 ஆயிரத்து 599 வாக்குகள் கிடைத்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 3 லட்சத்து 7 ஆயிரத்து 303 வாக்குகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 3 லட்சத்து 35 ஆயிரத்து 316 வாக்குகளும், தமிழ் மாநில காங்கிரஸுக்கு 2 லட்சத்து 30 ஆயிரத்து 711 வாக்குகளும் கிடைத்துள்ளது.

இந்நிலையில் இந்த கட்சிகளை விட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Nota has overtaken MNK by 1.25 lakhs in the Tamil Nadu assembly election.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X