For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தை விட்டு எந்த தொழிலும் வேறு மாநிலங்களுக்கு செல்லவில்லை: ஜெயலலிதா

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தை விட்டு எந்த தொழில் நிறுவனமும் வெளிமாநிலங்களுக்கு இடம்பெயரவில்லை என முதல்வர் ஜெயலலிதா கூறினார்.

சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. துறை ரீதியான மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று தொழில்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மானியங்கள் மீதான விவாதம் நடைபெற்றது.

தமிழகத்திற்கு வரவேண்டிய தொழிற்சாலைகள் வெளிமாநிலங்களுக்கு சென்று விட்டதாக தி.மு.க உறுப்பினர் டிஆர்பி ராஜா குற்றம்சாட்டினார்.

தொழிற்சாலைகள் செல்லவில்லை

தொழிற்சாலைகள் செல்லவில்லை

இதற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா பதிலளித்து பேசினார், அப்போது அவர், தொழில்நிறுவனங்கள் தமிழகத்தை தான் நாடி வருகின்றன. தமிழகத்தை விட்டு வேறெங்கும் செல்ல விரும்புவதில்லை.

தடையில்லா மின்சாரம்

தடையில்லா மின்சாரம்

சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதே இதற்கு முக்கிய காரணம். தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவதும் மற்றொரு காரணம் என்று கூறினார். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழகத்தை விட்டு தொழிற்சாலைகள் செல்லாது. அவ்வாறு சென்ற தொழிற்சாலைகளின் பெயர்களை தெரிவிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.

கூவி அழைத்தார்கள்

கூவி அழைத்தார்கள்

கர்நாடகா, ஆந்திராவுக்கு தொழில்நிறுவனங்கள் செல்வதாக திமுக சொல்வது தவறு. இரு மாநில முதல்வர்களும் சலுகைகள் அறிவித்தும் தமிழகத்தை விட்டு தொழில் நிறுவனங்கள் செல்லவில்லை. இலவச நிலம் தருவதாக கூறி கூவி கூவி வேறு மாநில முதல்வர்கள் அழைத்தும் தொழிற்சாலைகள் தமிழகத்தை விட்டு செல்லவில்லை என்றும் முதல்வர் கூறினார்.

ரயில் பெட்டி தொழிற்சாலை

ரயில் பெட்டி தொழிற்சாலை

திமுக ஆட்சிக்காலத்தில்தான் தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய மெட்ரோ ரயில் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலை ஆந்திரா மாநிலத்திற்கு சென்றது என்றும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். அதற்கு திமுக உறுப்பினர் சரியான பதில் கூறவில்லை என்றும் ஜெயலலிதா தெரிவித்தார்.

அந்நிய நேரடி முதலீடு

அந்நிய நேரடி முதலீடு

பெரும் தொழில்நிறுவனங்கள் கூட தமிழகத்திற்கு நோக்கிதான் வந்து வருகின்றன. அதிமுக ஆட்சியில் அதிகளவு அன்னிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளது .கடந்த 5 வருடங்களில் 85820 கோடி அன்னிய நேரடி முதலீடு அதிகரித்துள்ளது என்றார்.

காரசார விவாதம்

காரசார விவாதம்

சட்டசபையில் திமுக எம்.எல்.ஏ டிஆர்பி ராஜாவிற்கும் முதல்வர் ஜெயலலிதா இடையேயும் இன்று காரசார விவாதம் நடைபெற்றது. பேச்சினூடே டிஆர்பி ராஜாவைப் பார்த்து முதல்வர் ஜெயலலிதா, மை டியர் யங் மேன் என்று கூறினார்.

English summary
CM Jayalalitha has said that no industrial firm has gone out of Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X