அடப்பாவமே! பேப்பர் பிளேட் தயாரிக்கும் மூலப் பொருளாகிப் போனதே பாஜக உறுப்பினர் படிவம்!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கோவை: தமிழக பாஜகவின் உறுப்பினர் சேர்க்கை படிவத்திலான பேப்பர் பிளேட்டுகள் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் காலூன்றுவதற்கு பகீரத பிரயத்தனம் செய்கிறது பாஜக. மிஸ்டு கால் கொடுக்கும் முயற்சி தொடங்கி ஏகப்பட்ட அட்டெம்ப்ட்டுகளை செய்து பார்த்துவிட்டது அக்கட்சி.

Now BJP membership forms as raw material for Paper Plates

ஆனால் எதுவுமே கை கொடுக்காமல் போய்விட்டது. இப்போது அதிமுகவின் முதுகில் ஏறி சவாரி செய்வதற்கான அண்டர் கிரவுண்ட் வேலைகளை அற்புதமாக செய்து வருகிறது பாஜக.

இந்நிலையில் கோவையில் பேக்கரிகளில் விநியோகிக்கப்பட்ட பேப்பர் பிளேட்டுகளில் பாஜகவின் வலிமை பல்லைக் காட்டியது. ஆமாம் பாஜகவின் உறுப்பினர் படிவங்கள்தான் பேப்பர் பிளேட்டுகளாக பரிதாபமாக உருமாறி இருந்தன.

அதேநேரத்தில் பாஜகவின் உறுப்பினர் படிவங்களில் வங்கி எண், ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை எண் ஆகியவை கேட்கப்பட்டிருந்ததும் இப்போது சர்ச்சையாகி இருக்கிறது. தேர்தல் முறைகேடுகளில் ஈடுபடத்தான் இந்த எண்களை பாஜக கேட்கிறதா? என சர்ச்சையும் எழுந்துள்ளது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
TamilNadu BJP membership forms are using as raw material for the Paper Plates in Coimbatore.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற