அதிமுக அரசைக் கண்டித்து ஆக.10ல் ஆர்பாட்டம் - ஓபிஎஸ் ஆலோசனை - வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : கட்சியை பலப்படுத்துவது குறித்து ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இன்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

தமிழக அரசை கண்டித்து ஆகஸ்ட் 10ம் தேதி சென்னையில் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் போராட்டம் நடைபெறும் என்று அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

O.Paneerselvam conducts meeting with the cadres video

முதல்வர் எடப்பாடிக்கு எதிராக குரல் கொடுத்து வந்த ஓ.பிஎஸ் முதன்முறையாக அரசை எதிர்த்து போராட்டத்தை அறிவித்துள்ளார்.
புதிய நிர்வாகிகள் அறிவிப்பது குறித்தும், அ.தி.மு.க. அம்மா அணிக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு இருப்பது குறித்தும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இன்று ஆலோசனை நடத்தினர்.

சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பி.எஸ். வீட்டில் இந்த கூட்டம் நடந்தது. இதில் கே.பி.முனுசாமி, செம்மலை, நத்தம் விஸ்வநாதன், மா.பா.பாண்டியராஜன், மனோஜ் பாண்டியன், மைத்ரேயன் எம்.பி. உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் 10ஆம் தேதி நடைபெறும் ஆர்ப்பாட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தமிழக அரசை கண்டித்து நடக்கும் முதல் போராட்டத்தை சிறப்பாக நடத்துவது, ஆயிரக்கணக்கானவர்களை இதில் பங்கேற்க செய்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாநிலத்தின் பிற மாவட்டங்களிலும் போராட்டத்தில் குதிப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
ADMK rival faction O.Pannnerselvam holds meeting with his party cadres and discussed about the protests & strengthen the party district wide.
Please Wait while comments are loading...