துணை முதல்வர் ஓபிஎஸ் இன்று டெல்லி பயணம் - நாளை மோடியை சந்திக்கிறார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: துணை முதல்வர் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் இன்றிரவு டெல்லி பயணிக்கிறார். நாளை பிரதமர் மோடியை அவர் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியானது.

துணை முதல்வராக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக பிரதமர் மோடியை சந்திக்கப் போகிறார் ஓ.பன்னீர் செல்வம். கடந்த 6 ஆம் தேதியன்று டெல்லி சென்ற ஓபிஎஸ் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருந்தார். அப்போது மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்க சென்றதால் மோடியை சந்திக்க முடியவில்லை.

O.Paneerselvam to meet Modi in Delhi

இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வத்திற்கு நாளை பிரதமருடன் சந்திக்க நேரம் கிடைத்துள்ளதை அடுத்து இன்றிரவு டெல்லி செல்கிறார். ஓபிஎஸ் உடன் அவரது ஆதரவாளர்கள் மைத்ரேயன், கே.பி. முனுசாமி ஆகியோர் உடன் செல்கின்றனர்.

சசிகலா பரோலில் வந்த நாளன்று ஓ.பன்னீர் செல்வம் டெல்லியில் இருந்தார். தற்போது சசிகலா பரோல் முடிந்து பெங்களூரு செல்ல உள்ள நிலையில் மீண்டும் டெல்லி செல்கிறார் ஓ.பன்னீர் செல்வம். ஓபிஎஸ்சின் டெல்லி பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Deputy Chief Minister O. Panneerselvam, to meet Prime Minister Narendra Modi in Delhi on Thursday.
Please Wait while comments are loading...

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற