For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை! சென்னை, கடலூரில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும்

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை இலாகா அறிவித்துள்ள நிலையில், மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். பலரும் ஊரைப்பார்க்க கிளம்பிக்கொண்டுள்ளனர்.

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக சென்னை வானிலை இலாகா அறிவித்துள்ளது. இதனால் கடலூர், புதுச்சேரியில் கன மழையும், சென்னையில் மிதமான மழையும் பெய்ய கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

One more depression in Bay of Bengal create panic for TN people

இது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னெச்சரிக்கையாக கடலூருக்கு ராணுவம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே வெள்ளத்தில் மிதக்கும் கடலூர் மேற்கொண்டு வரும் மழையை எப்படி எதிர்கொள்ளப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

சென்னையில் வெள்ளம் வடியத்தொடங்கி, போக்குவரத்து இயங்கிவரும் இந்த சூழ்நிலையை பயன்படுத்தி சொந்த ஊர்களுக்கோ, பிற ஊர்களிலுள்ள உற்றார், உறவினர்கள் வீடுகளுக்கோ இடம்பெயர மக்கள் திட்டமிட்டுள்ளனர். பெரும்பாலான மக்கள் கிளம்பவும் தொடங்கிவிட்டனர்.

English summary
One more depression in Bay of Bengal create panic, among Chennai and Cudalore people.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X