நெல்லையில் தொடரும் விபரீதம்.. கலெக்டர் அலுவலகத்தில் டிரைவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நெல்லை: ஆட்சியர் அலுவலகத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கந்துவட்டி கொடுமையால் கடந்த திங்கள் கிழமை நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் இசக்கி முத்து என்பவர் குடும்பத்துடன் தீக்குளித்தார். இதில் இசக்கி முத்து அவரது மனைவி சுப்புலட்சுமி மகள்கள் மதி சரண்யா மற்றும் அட்சயப் ப்ரணிதா ஆகியோர் தீயில் கருகி உயிரிழந்தனர்.

One more Suicide attempt in Nellai collector office

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த அதிர்ச்சியில் இருந்தே மக்கள் இன்னும் மீளாத நிலையில் இன்று மீண்டும் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவர் தீக்குளிக்க முயன்றார். நெல்லை ஆட்சியர் அலுவலகம் எதிரே அரசு பேருந்து ஓட்டுநர் தீக்குளிக்க முயன்றார்.

இதையடுத்து அவரை மீட்ட காவல்துறையினர் தீக்குளிக்க முயன்றதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் பதற்றம் ஏற்பட்டது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
One more Suicide attempt in Nellai collector office. A govt bus driver tried suicide attempt in Nellai collector officer.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற