திவாகரனை அழைத்துச் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் - விசாரணைக்குப் பின் கைது?

Posted By:
Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்று வரும் நிலையில் மன்னார்குடியில் உள்ள திவாகரனை விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். அவர் கைது செய்யப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மன்னார்குடி: சசிகலாவின் சகோதரர் திவாகரனை வருமான வரித்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். மன்னார்குடியில் சோதனைகுப்பின் திவாகரனை வருமான வரித்துறையினர் அழைத்துச் சென்றனர்.

Operation Clean Money -IT raid at Divakaran house

நாடு முழுவதும் உள்ள சசிகலா, தினகரன் ஆதரவாளர்களின் வீடுகளில் காலை 6 மணி முதல் வருமான வரித்துறையினரின் சோதனை நடைபெற்று வருகிறது.

மன்னார்குடி, தஞ்சை ஆகிய இடங்களில் இன்று காலை 7 மணி முதல் தொடங்கிய சோதனை தொடர்ந்து நடந்து வருகிறது. இன்று பிற்பகல் வரை சோதனை நடைபெறும் என தெரிகிறது.

மன்னார்குடி அருகே சுந்தரக்கோட்டையில் உள்ள சசிகலாவின் தம்பி திவாகரன் வீட்டிலும் வருமான வரித்துறையினரின் சோதனை நடந்தது. காலை முதல் நடந்த சோதனையில் அதிகாரிகள் குழுக்களாக சென்று சோதனையிட்டனர்.

திவாகரன் வீடு மற்றும் அவருக்குச் சொந்தமான செங்கமலத் தாயார் மகளிர் கல்லூரி இன்று அதிகாலையிலிருந்து வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டனர்.

திவாகரன் உதவியாளர்கள் ராசுப்பிள்ளை, சுஜய் ஆகியோர் வீடுகளிலும் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை உள்ளே புகுந்து தீவர சோதனையில் ஈடுபட்டுள்ளது.

கிட்டத்தட்ட 4 மணி நேரத்துக்கும் மேலாக நடந்தவரும் ஐ.டி ரெய்டுக்கு திவாகரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்துவருகின்றனர். இந்நிலையில், திவாகரன் வீட்டுக்கு முன், அவரது ஆதரவாளர்கள் பெருமளவில் குவிந்துள்ளனர். வருமான வரித்துறையினரின் சோதனை முடிந்த பிறகே முக்கிய ஆவணங்கள் எதுவும் சிக்கியதா? என்ற விவரம் தெரிய வரும்.

இதனிடையே இந்த ரெய்டு பற்றி பேசிய திவாகரன்,இது உள்நோக்கம் கொண்டது என்று கூறினார். இது போன்ற சோதனைகளை நடத்தி மிரட்டி பணியவைக்க முடியாது என்றும் கூறினார்.

திவாகரனை சுந்தரக்கோட்டையில் இருந்து மன்னார்குடிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். மீண்டும் சுந்தரக்கோட்டைக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். வருமான வரித்துறையினர் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Income tax officers inquiry in Sasikala brother Divakaran. The raids are taking place at 187 locations in Tamil Nadu, as part of the Operation Clean Money drive against untaxed wealth, a senior Income Tax official

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற