For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2 முறை முதல்வராக இருந்த ஓ.பி.எஸ்ஸுக்கு சொந்த வீடு கிடையாதாம்... "நத்தம்" சொத்து 2 மடங்கானது

By Mayura Akilan
Google Oneindia Tamil News

சென்னை: தேனி மாவட்டம் போடி சட்டசபை தொகுதியில் போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தாக்கல் செய்த பட்டியலில் தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் மொத்தமாக ரூ.1 கோடியே 53 லட்சத்து 65 ஆயிரத்து 74 மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார். தன் பெயரில் நிலம், வீடு என எதுவும் இல்லை. வங்கியில் ரூ.25 லட்சம் கடன் உள்ளது என்று கூறியுள்ளார்.

திண்டுக்கல் ஆத்தூர் தொகுதி வேட்பாளர் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் ரூ.2 கோடியே 24 லட்சத்து 35 ஆயிரத்து 933 மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த 2011ல் இவர் தாக்கல் செய்த சொத்தின் மதிப்பு ரூ.1 கோடியே 39 லட்சத்து 48 ஆயிரத்து 19.

தேனி மாவட்டம் போடி தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் அமைச்சர் பன்னீர் செல்வம், நேற்று வேட்பு மனுத்தாக்கல் செய்தார்.

அதில் தனக்கு உள்ள சொத்துக்களைப் பட்டியலிட்டுள்ளார். ஓபிஎஸ் சொத்துக்களை விட நத்தம் விஸ்வநாதனுக்கு கூடுதலாக சொத்துக்கள் உள்ளது தெரியவந்துள்ளது.

ஓ.பி.எஸ் சொத்துக்கள்

ஓ.பி.எஸ் சொத்துக்கள்

பன்னீர்செல்வம் கையில் ரூ.10,000 ரொக்கம் வைத்துள்ளார். வங்கிகளில் 'டிபாசிட்' தொகை ரூ.9,39,893. ரூ.23,40,635 மதிப்பிலான இரண்டு கார்கள் உள்ளன. 16 கிராம் தங்கம் வைத்துள்ளார். இவரது அசையும் சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ. 33,20,529 ஆகும்.

வீடு, நிலம் இல்லை

வீடு, நிலம் இல்லை

அசையா சொத்துக்களான நிலம், வீடு, கட்டடம் என ஏதுவும் இல்லை.வங்கிகளில் பெற்ற மொத்தக் கடன் ரூ.25,00,734. வழக்கு எதுவும் நிலுவையில் இல்லை என குறிப்பிட்டுள்ளார். கடந்த 2011 தேர்தலில் இவரின் அசையும் சொத்து மதிப்பு ரூ.17,30,899. ஐந்து ஆண்டுகளில் அசையும் சொத்து மதிப்பு ரூ.15,89,630 அதிகரித்துள்ளது.

மனைவி பெயரில் சொத்துக்கள்

மனைவி பெயரில் சொத்துக்கள்

பன்னீர்செல்வம் மனைவி விஜயலட்சுமி பெயரில் அசையும் சொத்துக்களாக, கையிருப்பு ரூ.40,000. வங்கிகளில் 'டிபாசிட்' தொகை மற்றும் 200 கிராம் தங்க நகைகள் உட்பட ரூ.22,44,545 அசையும் சொத்து உள்ளது. அசையா சொத்துக்களின் மொத்த மதிப்பு ரூ.98லட்சம் என்று குறிப்பிட்டுள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன் ரூ. 34,20,000 அசையா சொத்து இருந்துள்ளது.

நத்தம் விஸ்வநாதன்

நத்தம் விஸ்வநாதன்

அமைச்சர் விஸ்வநாதனுக்கு கையிருப்பு ரூ.18 ஆயிரம். திண்டுக்கல் மெர்க்கன்டைல் வங்கியில் ரூ.7 லட்சத்து 32 ஆயிரத்து 882, ஆக்சிஸ் வங்கியில் ரூ.3 லட்சத்து 80 ஆயிரத்து 303, சென்னை இந்தியன் வங்கியில் ரூ.4 லட்சத்து 10 ஆயிரத்து 592, கோபால்பட்டி கூட்டுறவு வங்கியில் ரூ.10 லட்சத்து 7 ஆயிரத்து 914, எல்.ஐ.சி., சேமிப்பு ரூ.68 ஆயிரத்து 836, ஒரு கார் ரூ.9 லட்சம், 105 கிராம் தங்கம் மதிப்பு ரூ.2 லட்சத்து 25 ஆயிரம் என, அசையும் சொத்து ரூ.37லட்சத்து 43 ஆயிரத்து 527க்கு உள்ளது.

நிலம், வீடுகள்

நிலம், வீடுகள்

திண்டுக்கல் புன்னப்பட்டியில் ரூ.27 லட்சம் மதிப்பில் 8.62 ஏக்கர் நிலம், வேம்பார்பட்டியில் ரூ.9 லட்சத்தில் கட்டடம், ரூ.45 லட்சத்தில் 5 ஆயிரத்து 227 சதுரடி நிலம் என மொத்தம் அசையா சொத்தாக ரூ.93 லட்சம் உள்ளது.

மனைவி செல்வராணி சொத்துக்கள்

மனைவி செல்வராணி சொத்துக்கள்

இவரது கையிருப்பு ரூ.15 ஆயிரம்,திண்டுக்கல் மெர்க்கன்டைல் வங்கியில் ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்து 940ம், கோபால்பட்டி கூட்டுறவு வங்கியில் ரூ.40 ஆயிரத்து 707, ஆக்சிஸ் வங்கியில் ரூ.3 லட்சத்து 427, கவிதா டிரேடர்ஸ் கார்ப்பரேஷன் வங்கியில் ரூ.41 ஆயிரத்து 167, அதே நிறுவனத்தில் முதலீடு ரூ.45 லட்சம், எல்.ஐ.சி., பாலிசி ரூ.1 லட்சத்து 49 ஆயிரத்து 165.

நகைகள் எவ்வளவு?

நகைகள் எவ்வளவு?

புன்னப்பட்டி கிராமத்தில் ரூ.10 லட்சம் மதிப்பில் 3.41 ஏக்கர் நிலம். நத்தத்தில் ரூ.5 லட்சத்தில் 2,400 சதுரடி நிலம் என மொத்தம் ரூ.15 லட்சத்தில் உள்ளது. நகைகள் 820 கிராம் தங்க நகைகள்மதிப்பு ரூ.18 லட்சம் என, மொத்த அசையும் சொத்து ரூ.70 லட்சத்து 92 ஆயிரத்து 406 உள்ளது.

இரு மடங்கான சொத்து

இரு மடங்கான சொத்து

விஸ்வநாதனுக்கு மொத்த சொத்து ரூ.2 கோடியே 16 லட்சத்து 35 ஆயிரத்து 933 உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கடந்த 2011ல் தாக்கல் செய்த சொத்தின் மதிப்பு: வங்கியில் ரூ.5 லட்சத்து 83 ஆயிரத்து 955, நகைகள் 105 கிராம் மதிப்பு ரூ.1 லட்சத்து 55 ஆயிரம் என, அசையும் சொத்தாக ரூ.9 லட்சத்து 94 ஆயிரத்து 684.

கடன் இல்லை

கடன் இல்லை

புன்னப்பட்டி 8.62 எக்டேர் நிலம் ரூ.21 லட்சத்து 50 ஆயிரம் உட்பட அசையா சொத்தாக ரூ. 57 லட்சம் உள்ளது.இவரது மனைவி பெயரில் அசையும் சொத்து ரூ. 38 லட்சத்து 48 ஆயிரத்து 355, அசையா சொத்து ரூ. 10 லட்சம் இருந்தது. இதனால் மொத்தம் ரூ.1 கோடி 15 லட்சத்து 43 ஆயிரத்து 19 இருந்தது. இது தற்போது இருமடங்காக உயர்ந்து உள்ளது. 2011 தேர்தலில் ரூ.7 லட்சத்து 40 ஆயிரத்து 547 கடன் இருந்தது. இது தற்போது இல்லை.

அமைச்சர் செல்லூர் ராஜூ

அமைச்சர் செல்லூர் ராஜூ

மதுரை மேற்கு தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த அமைச்சர் செல்லூர் ராஜூ, தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் ரூ.1 கோடியே 18 லட்சத்து 89 ஆயிரத்து 415 மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த 2011 தேர்தலில் இவர் தாக்கல் செய்த சொத்தின் மதிப்பு ரூ.39 லட்சத்து 44 ஆயிரத்து 400 உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் உதயகுமார்

அமைச்சர் உதயகுமார்

மதுரை திருமங்கலம் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த அமைச்சர் உதயக்குமார், தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் ரூ.30 லட்சத்து 95 ஆயிரத்து 732 மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த 2011 தேர்தலில் இவர் தாக்கல் செய்த சொத்தின் மதிப்பு ரூ.14 லட்சத்து 59 ஆயிரம் ஆக இருந்தது.

கே.டி. ராஜேந்திர பாலாஜி

கே.டி. ராஜேந்திர பாலாஜி

விருதுநகர் சிவகாசி தொகுதி வேவட்பாளர் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தனக்கும், தனது குடும்பத்தினருக்கும் ரூ.2 கோடியே 14 லட்சத்து 29 ஆயிரத்து 334 மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த 2011ல் இவர் தாக்கல் செய்த சொத்தின் மதிப்பு ரூ.51 லட்சத்து 33 ஆயிரத்து 615 மட்டுமே இருந்தது.

English summary
Two-time Chief Minister and the Minister for Finance and Public Works as well. Yet, O. Panneerselvam’s personal assets are worth only Rs 8.6 lakh, if you take into account his liabilities. His wife, however, has properties worth just over Rs. one crore.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X