நெருங்கும் பொங்கல்.. அடுப்பு கட்டிகள் தயாரிக்கும் பணி தீவிரம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதால் தூத்துக்குடியில் அடுப்பு கட்டிகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தமிழர் திருநாளான பொங்கல் அன்று பெண்கள் வீட்டின் முன்பு பொங்கிடுவது வழக்கம். பழங்காலம் தொட்டு அடுப்பு கட்டிகள் அல்லது மண் அடுப்புகளில் பொங்கலிடுவது வழக்கம். இதற்காக அடுப்பு கட்டிகள் தயாரிக்கப்பட்டு விற்கப்படும்.

Oven making increases for Pongal festival

முன்னர் களிமண், வண்டல் மூலம் அடுப்பு கட்டிகள் தயாரிக்கப்பட்டு விற்கப்பட்டது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மண் எடுப்பதற்கு கடும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் சிமிண்ட் கட்டிகளுக்கு மாறியுள்ளனர்.

இந்தாண்டு பொங்கலை முன்னிட்டு அடுப்பு கட்டிகள் தயாரிக்கும் பணி தீவிரமா நடந்து வருகிறது. தூத்துக்குடி அண்ணா நகர் மற்றும் டூவிபுரம் பகுதியில் அடுப்பு கட்டிகள் தயாரிக்கப்படுகிறது.

தற்போது மண்ணுக்கு தட்டுபாடு ஏற்பட்டுள்ளதால் எம்சாண்ட் மற்றும் கிரஷர் தூள் கொண்டு அடுப்பு கட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. முதலில் சிமிண்ட் கலந்து கான்கீரிட் பிளாக் போல் தயாரிக்கப்படுகிறது. பின்னர் மெருக்கிற்காக சிமிண்ட் பூசப்படுகிறது.

பின்னர் கட்டிகளில் வெடிப்பு ஏற்படாமல் இருக்க ஒரு வார காலத்திற்கு நல்ல தண்ணீர் கொண்டு நனைக்கப்படுகிறது. பின்னர் அவை மெலிதான சிமிண்ட் பாலிஷ் செய்யப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. இவை மூன்று கட்டிகள் ரூ.195க்கு விற்கப்படுகிறது. தூத்துக்குடியில் சாலை ஓரத்தில் இந்த கட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டு விற்பனை மூம்முரமாக நடந்து வருகிறது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Oven making starts for Pongal festival in many places of Tamilnadu. Huge range of sale is expected this year in Tuticorin.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற