#HBDAjithkumar ! கைகள் பயன்படுத்தாமல்! பிரஷ் பயன்படுத்தாமல்! அஜித் படத்தை வரைந்த அசத்தல் ஓவியர்!
கள்ளக்குறிச்சி : நடிகர் அஜித்குமார் பிறந்தநாள் முன்னிட்டு, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ஓவியர் ஒருவர் கயிற்றை வாயால் கவ்வி அஜித் படத்தை வரைந்துள்ள சமூக வலைதளங்களில் பாராட்டை பெற்றுள்ளது.
Recommended Video
நடிகர் அஜித் தனி ஒருவனாக, விடாமுயற்சியால், தன்னம்பிக்கையுடன் திரைத்துறையில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.
இதற்கு காரணம் அவருடைய விடாமுயற்சி, தனி ஒருவனாக எதிர்நீச்சல் போட்டு வெற்றி அடையும் எண்ணம், தன்னம்பிக்கை போன்ற குணங்களை செயல்கள் தான் காரணம் என அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

நடிகர் அஜித்குமார்
இந்நிலையில் அவர் இன்று பிறந்த நாள் கொண்டாடும் நிலையில், ட்விட்டரில் #HBDAjithkumar என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. பலரும் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அரசியல் தலைவர் முதல் ரசிகர்கள், நடிகர் என பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

பிறந்தநாள் வாழ்த்து
இந்நிலையில் நடிகர் அஜித்குமார் பிறந்தநாள் முன்னிட்டு, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ஓவியர் ஒருவர் கயிற்றை வாயால் கவ்வி அஜித் படத்தை வரைந்துள்ள சமூக வலைதளங்களில் பாராட்டை பெற்றுள்ளது.

ஓவியம்
ஓவியர் செல்வம் அவர்கள் தன்னுடைய ஓவியத் திறமையால் புதுமையான முறையில் நடிகர் அஜித்குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக கைகளை கயிறால் கட்டிக்கொண்டு, உடம்பு முழுவதும் கயிற்றால் சுற்றி சுற்றி வளைத்து கட்டிக்கொண்டு மீதம் ஒரு பகுதி கயிறை தன் வாயால் கவ்விக்கொண்டு, வாயில் இருக்கும் கயிற்றை நீர்வண்ணத்தில் தொட்டு 20 நிமிடங்களில் நடிகர் அஜித் குமார் உருவத்தை ஓவியர் செல்வம் வரைந்துள்ளார்.

பலரும் பாராட்டு
இந்த ஓவியத்தை கண்ட பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் பிரஷ் இல்லாமல் கைகளைக் கட்டிக்கொண்டு,
உடம்பு முழுவதும் கயிற்றால் கட்டிக்கொண்டு, கயிற்றை வாயால் கவ்விக்கொண்டு நடிகர் அஜித் படத்தை வரைந்த செல்வத்தைவெகுவாக பாராட்டினார்கள். இந்த ஓவியம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் பலரும் பாராட்டி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications