For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருச்சி அருகே தடம் புரண்ட பல்லவன் ரயில்... 3 மணி நேரம் தாமதம்!

பல்லவன் விரைவு ரயில் தடம்புரண்ட விபத்தில் 10 பேர் காயமடைந்தனர்,

Google Oneindia Tamil News

Recommended Video

    திருச்சி அருகே பல்லவன் எக்ஸ்பிரஸ் என்ஜின் தடம்புரண்டது.. பயணிகள் அவதி

    திருச்சி: திருச்சி அருகே பல்லவன் விரைவு ரயிலின் எஞ்சின் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

    காரைக்குடியிலிருந்து சென்னை செல்லும் பல்லவன் எக்ஸ்பிரஸ், இன்று காலை திருச்சி கிராப்பட்டி அருகே வந்து கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக விரைவு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 8 சக்கரங்கள் தரை இறங்கியதால் சமயோஜிதமாக செயல்பட்டு ஓட்டுநர் ரயிலை நிறுத்திவிட்டார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    Pallavan Express Engine Derails at Trichy

    தடம் புரண்டதால் பயணிகள் அலறியடித்து கொண்டு ரயிலிலிருந்து இறங்கி ஓடினார்கள். இதில் ரயிலில் பயணம் செய்த பயணிகள் 10 பேர் காயமடைந்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே அதிகாரிகள் விரைந்து வந்தனர்.

    எஞ்சினை தண்டவாளத்தில் நிறுத்தும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் காலை 6,40 மணிக்கு திருச்சி வேண்டிய ரயில் வராததால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

    மேலும் மதுரை - சென்னை இடையேயான வைகை எக்ஸ்பிரஸ் ரயில் திண்டுக்கல்லில் நிறுத்தப்பட்டுள்ளது. இதே போல் திருவனந்தபுரம் இன்டர்சிட்டி, திண்டுக்கல், ராமேஸ்வரம் பயணிகள் ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.

    இந்நிலையில், ரயில்வே துறை அதிகாரிகள், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ''விசாரணைக்குப் பிறகுதான் ரயில் தடம்புரண்டதற்கான காரணம் தெரியவரும்" என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்,

    English summary
    The engine of Pallavan Express was triggered by the accident near Trichy. It is reported that 10 passengers traveled in the train have been injured. The train was stopped at 6.40 am when the train was not available.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X