தினகரனுக்கு எதிராக பண்ருட்டி ராமச்சந்திரன் திடீர் போர்க்கொடி! ஈபிஎஸ் அணியில் இருப்பதாக தகவல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவின் துணைப் பொதுச்செயலராக தினகரனை சசிகலா நியமித்தது தவறு என திடீரென பண்ருட்டி ராமச்சந்திரன் போர்க்கொடி தூக்கியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சசிகலா தலைமையை ஏற்றுக் கொண்டவர்களில் எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதியான பண்ருட்டி ராமச்சந்திரனும் ஒருவர். அதிமுகவில் ஓபிஎஸ் கலகக் குரல் எழுப்பிய நிலையில் பண்ருட்டி ராமச்சந்திரன் அமைதி காத்து வந்தார்.

குறிப்பாக அதிமுகவின் துணைப் பொதுச்செயலராக தினகரன் நியமனத்துக்குப் பின்னர் தீவிர அரசியலில் இருந்து பண்ருட்டி ராமச்சந்திரன் ஒதுங்கியே இருந்தார். அண்மையில் கூட தினகரன் அணியில் பண்ருட்டி ராமச்சந்திரன் இணையப் போவதாகவும் கூறப்பட்டு வந்தது.

பண்ருட்டி திடீர் பேட்டி

பண்ருட்டி திடீர் பேட்டி

கடந்த 6 மாத கால அரசியல் துறவறத்துக்குப் பின் இன்று கடலூரில் திடீரென செய்தியாளர்களை சந்தித்தார் பண்ருட்டி ராமச்சந்திரன். அப்போது அவர் கூறியதாவது:

து.பொ.செயலர் சரி அல்ல

து.பொ.செயலர் சரி அல்ல

அதிமுகவின் துணை பொதுச்செயலராக தினகரனை சசிகலா நியமித்தது தவறு. அதை ஏற்றுக் கொள்ள முடியாது.

ஆட்சியும் கட்சியும்

ஆட்சியும் கட்சியும்

தற்போது அதிமுகவும் ஆட்சியும் ஓபிஎஸ், ஈபிஎஸ் வசம்தான் உள்ளது. அவர்களது அணியில்தான் நான் இருக்கிறேன்.

ஒருபோதும் நடைபெறாது

ஒருபோதும் நடைபெறாது

தமிழக அரசு பாஜகவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறப்படுவதை ஏற்க முடியாது. தமிழகத்தை பாஜக ஒருபோதும் ஆளவே முடியாது.

இவ்வாறு பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
AIADMK Senior leader Panruti Ramachandran revolt against Dinakaran.
Please Wait while comments are loading...