For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பசுபதி பாண்டியன் கொலை வழக்கு: மின்னலாய் சரணடைந்த சுபாஷ் பண்ணையார்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Subash Pannaiyar
திண்டுக்கல்: பசுபதி பாண்டியன் கொலை வழக்குத் தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் சுபாஷ் பண்ணையார் சரணடைந்தார்.

மறைந்த வெங்கடேச பண்ணையாரின் சகோதரர் சுபாஷ் பண்ணையார். இவர்களது குடும்பத்தினருக்கும் தேவேந்திர குல வேளாள கூட்டமைப்பின் தலைவரான பசுபதி பாண்டியனுக்கும் முன் பகை இருந்து வந்தது.

கடந்த 2012 ஜனவரியில் பசுபதி பாண்டியன் திண்டுக்கலில் உள்ள அவரது வீட்டில் இருக்கும்போது வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதில் சுபாஷ் பண்ணையார் உட்பட 14 பேர் குற்றவாளி பட்டியலில் உள்ளனர்.

ஓராண்டுக்கு மேல் தலைமறைவாக இருந்த சுபாஷ் பண்ணையார் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஆஜராகும் வரை அவரை கைது செய்யக்கூடாது என்று நீதிமன்றத்தில் அனுமதி வாங்கியிருந்தார் சுபாஷ் பண்ணையாரின் வழக்கறிஞர்.

இந்நிலையில் இன்று 3.12.2013ல் பசுபதி பாண்டியன் கொலைவழக்கில் திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஜே.எம். நீதிமன்றத்தில் திடீரென சரணடைந்தார்.

வரும் 24.12. 2013 தேதியன்று ஜாமீன் மனு விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார். மின்னல் வேகத்தில் நீதிமன்றத்திற்கு வந்த சுபாஷ் பண்ணையார் மின்னல் வேகத்திலேயே நீதிமன்றத்தை விட்டு சென்றுவிட்டார்.

English summary
Venkatesa Pannaiyar’s brother Subash Pannaiyar has surrender in Dindugul JM court today, in connection with Pasupathi Pandiyan murder case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X