2 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த மருத்துவர்கள் போராட்டத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்களின் போராட்டம் 2 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்தது. இதனால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மருத்துவர் தாக்கப்பட்டதைக் கண்டித்து அனைத்து மருத்துவர்களும் மாலை 5 மணிமுதல் சென்ட்ரல் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் என அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் நோயாளிகள் சிகிச்சையளிக்க ஆள் இல்லாமல் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

Patients suffered severely due to doctor's protest in chennai

நோயாளிகள் பாதிக்கப்படுவதால் மருத்துவர்கள் உடனடியாக போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வலியுறுத்தி நோயாளிகளின் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேநேரத்தில் மருத்துவர்கள் தாக்கியதாக கூறி பத்திரிக்கையாளர்களும் தர்ணாவில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர். சென்னையின் முக்கிய சாலையான பூந்தமல்லி நெடுஞ்சாயில் நீடித்த இந்தப் போராட்டத்தால் போக்கு வரத்து முடங்கியது. அலுவலகம் முடிந்து வீடு திரும்புவர்கள் பெரும் அவதிக்கு ஆளாகினர். வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு வரிசைக்கட்டி நின்றதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

ஒருவழியாக மருத்துவரை தாக்கியவர் கைது செய்யப்பட்டதால் போராட்டம் முடிவுக்கு வந்தது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Patients suffered severely due to doctor's protest in chennai. Transport also suffered heavily.
Please Wait while comments are loading...