For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அன்று உணர்வோடு பெரியாரும் அண்ணாவும் முன்வைத்தது திராவிட நாடு இதுதான்!

மாட்டிறைச்சிக்கு தடை என்கிற நிலையில் தமிழகம் கேரளம் கர்நாடகம் ஆகிய பகுதி மக்கள் மத்தியில் திராவிட நாடு கோஷம் டிவிட்டர் பேஸ்புக் சமூக வலைத்தளங்களில் பற்றி எரிகிறது. இந்த நிலையில் 'திராவிட நாடு ' என்பதி

By Devarajan
Google Oneindia Tamil News

சென்னை: சமூக வலைத்தளங்களில் ஒரே நாளில் 'திராவிட நாடு' முழக்கம் பெருத்த அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியில் மோடி தலைமையில் ஆளும் பாஜக அரசு கடிவாளம் இல்லா குதிரையாக இந்திய மக்களின் எல்லா வகை நிலைகளிலும் வாய்வைத்துக் கடித்துக் குதறிவருகிறது. இதற்கு உதாரணமாக இருப்பதுதான் மாடுகள் விற்பனைக்கு தடை என்பது. இது வெறும் விலங்குகள் மீது அபிமானம் கொண்டு, முறைப்படுத்தும் சட்டம் என்று அமைதியாக ஒதுங்கிடமுடியாது.

பல தரப்பட்ட மக்களின் ஒருங்கிணைந்த தேசமாக இருப்பதுதான் இந்தியா. அதில் ஒருபகுதி மக்கள் அல்லது ஒரு மொழி பேசும் மக்களின் பழக்க வழக்கங்களை, கலாசாரத்தை ஒட்டுமொத்த தேசம் முழுக்க திணிப்பது மிகப் பெரிய எதிர்விளைவுகளை ஏற்படுத்திட கூடும் என்று அச்சம் தெரிவிக்கிறாரகள் அரசியல் நோக்கர்கள்.

டிவிட்டர் வாசிகளின் திராவிட நாடு

டிவிட்டர் வாசிகளின் திராவிட நாடு

இந்த நிலையில் திராவிட நாடு டிவிட்டரில் ட்ரெண்டாகியுள்ளது கவனிக்கத்தக்க விஷயம். இது மத்திய பாஜக அரசுக்கு எதிராக தென் இந்திய மக்கள் திரண்டு வருவதை வெளிப்படுத்துகிறது.

கேரளாவுக்கு மாட்டிறைச்சி இல்லை

கேரளாவுக்கு மாட்டிறைச்சி இல்லை

தமிழகத்தில் இருந்து மாடுகள் கேரளாவுக்கு வருவதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் கேரள மாநிலத்தவர் கொதிக்கிறார்கள் என்று கூறப்பட்டாலும் திராவிட நாடு என்று அவர்கள் கூறுவது மிக முக்கியமான ஒன்றாகும்.

திராவிட நாடு பற்றி பெரியார்

திராவிட நாடு பற்றி பெரியார்

இந்தியாவில் ஜின்னா தலைமையில் முஸ்லிம் லீக், பாகிஸ்தான் தனி நாடு கோரிக்கையைத் துவக்கிய அதே காலத்தில் திராவிடர் கழகமும் தனிநாடு கோரிக்கையை உயர்த்திப் பிடித்தார் பெரியார்.

பெரியாரின் திராவிட நாடு

பெரியாரின் திராவிட நாடு

1938-ல் முதலாவது இந்தி எதிர்ப்பு போரின் முடிவில் சென்னை மெரினா கடற்கரை பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார் தனித் தமிழ்நாடு முழக்கத்தை முன்வைத்தார். இதன் பின்னர் 1940-ம் ஆண்டு ஆகஸ்ட் 4-ந் தேதி திருவாரூாில் நடைபெற்ற 15-வது நீதிக்கட்சி மாநாட்டில் , திராவிடர்களுடைய கலை, நாகாரீகம், பொருளாதாரம் ஆகியவைகள் முன்னேற்றமடைவதற்கு, பாதுகாப்பதற்கு, திராவிடர்களின் அகமாகிய சென்னை மாகாணம் இந்திய மந்திாியின் நேரடிப் பார்வையின்கீழ் ஒரு தனிநாடாகப் பிாிக்கப்பட வேண்டும்‘ என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெரியார் கேட்ட திராவிட நாடு சென்னை மாகாணத்தை தனிநாடாக்குவது என்பது.

அண்ணாவின் திராவிட நாடு

அண்ணாவின் திராவிட நாடு

ஆனால் அண்ணாதான் தென்னிந்திய மாநிலங்களை உள்ளடக்கிய திராவிட நாடு கோரினார். அந்த திராவிட நாடு கோரிக்கைதான் இப்போது பேசப்பட்டு வருகிறது.

English summary
Periyar E. V. Ramasamy said about Dravidian country on his writings
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X