தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பைகளுக்கு விரைவில் தடை? அமைச்சர் தகவல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பைகளை தமிழகம் முழுவதும் தடை செய்வது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பண்ணன் தெரிவித்துள்ளார்.

சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது பத்மநாபபுரம் திமுக உறுப்பினர் மனோ தங்கராஜ், சுற்றுலா தலமான கன்னியாகுமரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுவதால், கழிவு நீர் குழாய்களில் அடைப்பு ஏற்படுவதாகத் தெரிவித்தார்.

plastic covers to be banned in tamil nadu, says minister

இதனால் கழிவு நீர் வெளியேறி, வருவதால் சுற்றுலா பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். இதனை கருத்தில் கொண்டு பிளாஸ்டிக் பைகளை தடை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் கருப்பண்ணன், இந்த விவகாரம் தொடர்பாக மூத்த அமைச்சர்களுடன் ஏற்கனவே தாம் ஆலோசனை நடத்தியதாகத் குறிப்பிட்டார். மேலும் தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பைகளை தடை செய்வது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் ஆலோசனை செய்து விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
plastic covers to be banned in tamil nadu, Minister for Environment K.C.Karuppannan says in assembly
Please Wait while comments are loading...