அனைவருக்கும் வணக்கம், உங்களுடன் இருப்பது மகிழ்ச்சி...தமிழில் பேசி அசத்திய மோடி!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  என் வீட்டில் வந்து ஓய்வெடுங்கள்... கருணாநிதிக்கு மோடி அழைப்பு- வீடியோ

  சென்னை : தினத்தந்தி பவளவிழாவில் பங்கேற்று சிறப்பு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி அனைவருக்கும் வணக்கம் என்று தமிழில் தனது உரையைத் தொடங்கினார். பிரதமர் தமிழில் பேசியதற்கு அரங்கில் இருந்தவர்கள் கைத்தட்டல்களை அளித்தனர்.

  பிரதமர் நரேந்திர மோடி எந்த மாநலம் அல்லது நாட்டிற்கு செல்கிறாரோ அந்த நாடு, மாநில மொழியில் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அண்மையில் இலங்கைக்கு சுற்றுப் பயணம் சென்ற போதும் கூட தன்னுடைய நிகழ்ச்சிகள் குறித்த அப்டேட்களை சிங்களம் மற்றும் தமிழ் மொழியில் போட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

   PM Modi started his inaugural speech in tamil and the visitora given warm welcome for that

  இந்நிலையில் சென்னை விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி முதலில் கனமழையால் தமிழகம், சென்னையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்தார். கனமழைக்கான உதவிகளுக்கு தமிழக அரசுடன் எப்போதும் மத்திய அரசு துறை நிற்கும் என்று கூறிய அவர், மூத்த பத்திரிக்கையாளர் மோகன் மறைவிற்கும் இரங்கல் தெரிவித்தார்.

  இதனையடுத்து நிகழ்ச்சி பேரூரையாற்றத் தொடங்கிய மோடி, அனைவருக்கும் வணக்கம் என்று தமிழில் தன்னுடைய பேச்சைத் தொடங்கினார். தொடர்ந்து தந்தியின் 75வது விழாவில் உங்களுடன் இங்கிருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றும் அவர் தெரிவித்தார். பிரதமர் தமிழில் தனது உரையைத் தொடங்கியதையடுத்து அரங்கில் இருந்த சிறப்பு விருந்தினர்கள் அவருக்கு கைதட்டல்களை பரிசாகத் தந்தனர். இதே போன்று தன்னுடைய உரையை முடிக்கும் போது வணக்கம் என்று கூறி பிரதமர் தன்னுடைய உரையை நிறைவு செய்தார்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  PM Narendra Modi started his inaugural speech at Thanthi platinum celebration in Tamil received warm welcome as he is following the stratergy of wherever he goes start his speech in the regional language.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற