For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகனுக்காக திண்ணை பிரசாரம்… விசிலடிக்கச் சொல்லி உற்சாகப்படுத்தும் டாக்டர் ராமதாஸ்

By Mayura Akilan
|

தர்மபுரி: பொதுக்கூட்டம் போட்டு வாக்காளர்களை சந்திப்பது ஒருவகை, கிராமம், கிராமமாக சென்று வாக்காளர்களை சந்திப்பது மற்றொருவகை. இதில் முதல்வகை பிரசாரத்தை விட இரண்டாம்வகை பிரசாரம்தான் அதிகம் கை கொடுக்கும் என்பதால் பெரும்பாலான தலைவர்கள் திண்ணை பிரசாரம் எனப்படும் இரண்டாவது வகை பிரசாரத்தையே கையில் எடுத்துள்ளனர்.

கூட்டணி பிணக்கில் இருந்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இப்போது பிரசார களத்தில் இறங்கி கடந்த 5 நாட்களாக தர்மபுரி தொகுதியில் மகன் அன்புமணிக்காக கிராமம், கிராமமாக, வீதி வீதியாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

நேற்று ஒரே நாளில் புளியந்தோப்பு, உலகம்பட்டி, சிக்கமாரண்டஅள்ளி, சிக்கார்த்தனஅள்ளி, மோதுகுலஅள்ளி, பி.கொல்லஅள்ளி, வாழைத்தோட்டம், புள்ளாளப்பட்டி ஆகிய கிராமங்களில் திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்ட டாக்டர் ராமதாஸ் மாம்பழ சின்னத்திற்கு பொதுமக்களிடம் வாக்கு கேட்டார்.

PMK founder Dr.Ramadoss election campaign in Dharmapuri

அமைச்சராக இருந்தபோது

அன்புமணி ராமதாஸ் மத்திய அமைச்சராக இருந்த போது செய்த சாதனைகளை எடுத்து கூறிய ராமதாஸ், தமிழகத்தில் அனைவரும் படிக்க வேண்டும் என்று சொல்லும் ஒரே கட்சி பா.ம.க. தான் என்றார்.

இலவசங்கள் அவசியமா?

அ.தி.மு.க., தி.மு.க. போன்ற திராவிட கட்சிகள் தாங்கள் ஆட்சியின் போது மக்களுக்கு இலவசங்களை கொடுத்து வாழ்க்கையில் முன்னேற விடாமல் தடுத்து விட்டனர்.

குடிகாரர்களாக்கிய திராவிட கட்சிகள்

தமிழ்நாட்டில் படி படி என்று கூறுவது பாட்டாளி மக்கள் கட்சி, ஆனால் திராவிட கட்சிகள் குடி குடி என்று கூறி இளைஞர்களையும், தொழிலாளர்களையும் குடிக்க வைத்து நாட்டையே குடிக்கார நாடாக மாற்றி விட்டனர்.

பின்தங்கிய மாவட்டம்

தர்மபுரி லோக்சபா தொகுதி மற்ற தொகுதிகளை காட்டிலும் மிகவும் பின் தங்கிய தொகுதியாகும். குறிப்பாக தர்மபுரி மாவட்டம் எந்த வகையிலும் முன்னேறாத மாவட்டமாக விளங்கி வருகிறது.

வேலை வாய்ப்பு

இங்குள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு என்பது மிகவும் அவசியமாகும். இந்த வேலைவாய்ப்புக்கான தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த பா.ம.க. வெற்றி பெற வேண்டும் என்று அவர் கூறினார்.

என்ன சாப்பாடு உங்க வீட்ல..

திண்ணையில் அமர்ந்து பிரசாரம் செய்யும் ராமதாஸ், அந்த வீட்டு பெண்மணிகளிடம், இன்னைக்கு உங்க வீட்ல என்ன சாப்பாடு, என்ன கொழம்பு என்று கேட்டு டச்சிங் ஆக பேசுகிறார்.

அட விசிலடிங்கப்பா..

பிரசாரத்தின் போது தன்னை சுற்றி நிற்கும் இளைஞர்களைப் பார்த்து அட விசிலடிங்கப்பா... என்று கூறுகிறார். முன்பெல்லாம் எனக்கு விசிலடிச்சா பிடிக்காது. ஆனா இப்போ விசில் சத்தம் கேட்டா 2 வயசு குறைந்தது போல இருக்கு என்று இளைஞர்களையும் உற்சாகப்படுத்துகிறார்.

கூட்டணிக் கட்சிகள் பங்கேற்பு

டாக்டர் ராமதாஸ் உடன் வன்னியர் சங்க மாநில துணை தலைவர் பாடி செல்வம், பா.ம.க. மாவட்ட தலைவர் மன்னன், தே.மு.தி.க. விஜயசங்கர், ம.தி.மு.க. நவாப்ஜான் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மகனுக்கு மட்டுமே வாக்கு

இந்த 5 நாட்களும் தர்மபுரி தொகுதியை சுற்றி வரும் ராமதாஸ், தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பற்றியோ, பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியைப் பற்றியோ குறிப்பிடவில்லையாம். பாமக, அன்புமணி ஆகிய இரண்டை பற்றி மட்டுமே கூறி வாக்கு சேகரிக்கிறாராம்.

அனைத்து தொகுதிகளிலும்

தர்மபுரி தொகுதியில் மட்டுமல்லாது அனைத்து தொகுதிகளிலும் இதே பாணியிலான பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளாராம் டாக்டர் ராமதாஸ்.

டீக்கடை பிரசாரத்தில் அன்புமணி

அப்பா திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டு மக்களை சந்திப்பது போல வேட்பாளர் அன்புமணி, டீக்கடைகள் தோறும் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டு அனைவரையும் கவர்ந்து வருகிறார்.

English summary
PMK Chief Dr. S. Ramadoss's Election Campaign in Dharmapuri district villages and he Urged the People To Vote For PMK Lok Sabha Candidate Anbumani Ramadoss.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X