For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாமக 3வது வேட்பாளர் பட்டியல்: தி.மலை- எதிரொலி மணியன், சிதம்பரம்-கோபி, கடலூர்- கோவிந்தசாமி

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில் 3வது வேட்பாளர் பட்டியலை இன்று பாமக வெளியிட்டுள்ளது.

லோக்சபா தேர்தலில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்களின் பட்டியல் ஏற்கெனவே 2 கட்டமாக வெளியிடப்பட்டிருக்கிறது. இன்று 3வது வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

pmk

திருவண்ணாமலையில் எதிரொலி மணியன், சிதம்பரத்தில் கோபி என்ற கோபாலகிருஷ்ணன் மற்றும் கடலூரிக் மருத்துவர் இரா. கோவிந்தசாமி ஆகியோர் பாமக வேட்பாளர்களாக போட்டியிடுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 10 தொகுதி வேட்பாளர்கள்

பாட்டாளி மக்கள் கட்சி ஏற்கெனவே 7 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அக்டோபர், நவம்பர் மாதங்களில் அறிவித்திருந்தது.

அதில், கிருஷ்ணகிரி - ஜி.கே. மணி, அரக்கோணம் - ஆர். வேலு, ஆரணி - அ.கி. மூர்த்தி, சேலம் - அருள், புதுவை - அனந்தராமன், விழுப்புரம் (தனி) - வடிவேல் ராவணன், மயிலாடுதுறை- க.அகோரம் ஆகியோர் போட்டியிடுவர் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது 3 வது வேட்பாளர் பட்டியலில் 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். வேட்பாளர் பட்டியலை பாமக வெளியிட்டு வந்தாலும் கூட்டணி தொடர்பாக பாஜகவுடன் மும்முரமாக பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

English summary
The Pattali Makkal Katchi (PMK) on Thursday released a list of candidates for 3 Lok Sabha constituencies in Tamil Nadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X