விழுப்புரம் குலுங்கியது... பாமகவின் மிக பிரமாண்ட சமூக நீதி மாநாட்டில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
  பாமகவின் மிக பிரமாண்ட சமூக நீதி மாநாடு-வீடியோ

  விழுப்புரம்: பாமக நடத்திய மிக பிரமாண்ட சமூக நீதி மாநாட்டில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றதால் விழுப்புரமே குலுங்கியுள்ளது. மாநாடு முடியும்வரை லட்சக்கணக்கான இளைஞர்களின் கூட்டம் கலையாமல் இருந்தது.

  1987-ல் இடஒதுக்கீட்டுக்கான போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் பலியாகினர். இதன் விளைவாக 108 ஜாதிகளுக்கு இடஒதுக்கீடு கிடைத்தது.

  PMK Social justice conference in Villupuram

  இந்த 21 இடஒதுக்கீட்டு தியாகிகளின் 30-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு விழுப்புரம் அருகே ஜானகிபுரத்தில் சமூக நீதி மாநாட்டை இன்று பாமக நடத்தியது. மிக பிரமாண்டமான இந்த மாநாட்டில் பல லட்சம் இளைஞர்கள் பங்கேற்றனர்.

  லட்சக்கணக்கானோர் மாநாட்டுக்கு திரண்டதால் விழுப்புரமே குலுங்கிப் போனது. மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், ஜி.கே. மணி, காடுவெட்டி குரு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  மாநாட்டின் தொடக்கத்தில் இடஒதுக்கீட்டுக்காக உயிர் தியாகம் செய்த 21 பேருக்கும் டாக்டர் ராமதாஸ், அன்புமணி, ஜி.கே. மணி, காடுவெட்டி குரு உள்ளிட்டோர் வீரவணக்கம் செலுத்தினர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  PMK is conducting social justice conference in Villupuram to pay tribute for who sacrificed their life in Reservation.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற