பெண் புரோக்கராக மாறிய பேராசிரியர் நிர்மலா தேவி மீது வழக்கு பதிவு

Posted By:
Subscribe to Oneindia Tamil
  புரோக்கராக மாறிய பேராசிரியை..வெளியான அதிர்ச்சி ஆடியோ

  விருதுநகர்: அருப்புக்கோட்டையில் தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்ததாக கல்லூரி நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் போலீஸார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

  விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்று மதுரை காமராஜர் பல்கலைரக்கழகத்தின் கீழ் இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் கணிதத் துறை பேராசிரியராக உள்ளவர் நிர்மலா தேவி.

  இவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயரதிகாரிகளுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வருமாறு 4 மாணவிகளை போனில் வற்புறுத்திய ஆடியோ காட்சிகள் வெளியானது.

  கட்டாயப்படுத்திய பேராசிரியர்

  அந்த ஆடியோவில் அந்த மாணவிகளிடம் மிகவும் நாசுக்காக பேசும் நிர்மலா தேவி, அதிகாரிகளுடன் படுக்கைக்கு சென்றால் கட்டாயம் 85 சதவீத மதிப்பெண்களும், அவரவர் வங்கிக் கணக்குகளுக்கு பணமும் கிடைக்கும் என்கிறார். இதை கேட்ட மாணவிகள் இது குறித்து மேலும் பேசாதீர்கள், எங்களுக்கு விருப்பம் இல்லை என்கின்றனர். எனினும் 19 நிமிடங்கள் அவர்களை தொடர்ந்து நிர்மலா தேவி வற்புறுத்தி பேசும் காட்சிகள் ஒலிப்பரப்பப்பட்டன.

  நிர்மலா தேவி சஸ்பெண்ட்

  நிர்மலா தேவி சஸ்பெண்ட்

  இதையடுத்து மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்ததை அடுத்து நிர்மலா தேவியை கல்லூரி நிர்வாகம் 15 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்தது. மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற நிர்மலா தேவியை கைது செய்ய வேண்டும் என மாணவர்களும், மாதர் சங்கத்தினரும் கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

  விசாரணை நடத்தப்படும்

  விசாரணை நடத்தப்படும்

  இதுகுறித்து உயர்கல்வித் துறை செயலாளர் சுனில்பாலிவால் கூறுகையில், பேராசிரியை நிர்மலா குறித்து முழுமையாக விசாரிக்கப்படும். விருதுநகர் எஸ்பியிடம் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என்றார் அவர்.

  ஆர்ப்பாட்டத்தை அடுத்து புகார்

  ஆர்ப்பாட்டத்தை அடுத்து புகார்

  கல்லூரி முன்பு மாணவர்களும், மாதர் சங்கத்தினரும் ஆர்ப்பாட்டம் நடத்தியதை அடுத்து கல்லூரி செயலாளர் மற்றும் கல்லூரி முதல்வர் பாண்டியராஜன் ஆகியோர் நிர்மலா தேவி மீது போலீஸில் புகார் அளித்துள்ளனர். புகாரை பெற்று கொண்ட அருப்புக்கோட்டை டிஎஸ்பி தனபால், சட்டரீதியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

  வீட்டில் வைத்து விசாரணை

  வீட்டில் வைத்து விசாரணை

  பேராசிரியை நிர்மலா தேவி மீது கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் அருப்புக்கோட்டை காவ்யா நகரில் உள்ள அவரது வீட்டுக்கு ஏடிஎஸ்பி மதி தலைமையிலான போலீஸார் சென்றனர். அங்கு நிர்மலா பூட்டிய வீட்டுக்குள் உள்ளே இருந்து கொண்டு வெளியே வர மறுக்கிறார். இதனால் உறவினர்களை வரவழைத்து அவரது வீட்டு பூட்டை உடைக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதனிடையே அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக்கு பிறகு அவர் கைது எந்நேரத்திலும் செய்யப்படலாம் என தெரிகிறது.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

  English summary
  Police complaint given against Professor Nirmala Devi by the College Administration.

  நாள் முழுவதும் oneindia
  செய்திகளை உடனுக்குடன் பெற