பணிச்சுமை.. கணவர், குழந்தைகளிடம் பேச முடியலை.. சென்னை பெண் ஆய்வாளர் பகிரங்கமாக தற்கொலை மிரட்டல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : பணிச்சுமை காரணமாக குடும்பத்தினரை கூட பார்க்க முடியவில்லை என்பதால் தற்கொலை செய்து கொள்ள போவதாக கீழ்ப்பாக்கம் காவல் ஆய்வாளர் வாட்ஸ் ஆப்பில் மிரட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கீழ்ப்பாக்கம் தலைமை செயலக குடியிருப்பு காலனி காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு ஆய்வாளராக பணியாற்றி வருபவர் ராஜேஸ்வரி. இவர் இன்று காலை காவலர்களுக்கான வாட்ஸ் ஆப் குரூப்பில் ஒரு ஆடியோவை அனுப்பியுள்ளார்.

Police inspector Rajeswari in Chennai says about her suicide in Whats app

அந்த ஆடியோவில் ராஜேஸ்வரி கூறுகையில் பதவிக்காகவும், பணத்துக்காகவும் மட்டுமே இருக்கும் உயர் அதிகாரிகளுக்கு தங்களிடம் எவ்வாறு வேலை வாங்குவது என தெரியவில்லை. அவர்களது நோக்கம் பதவி போய்விடுமோ என்ற பயம்தான்.

கஷ்டம் என்றால் என்னவென்றே தெரியாத அதிகாரிகள் மத்தியில் நாங்கள் தவித்து கொண்டிருக்கிறோம். வீட்டிலும் சரி பணியிடத்திலும் சரி நிம்மதி இல்லை. நான் மட்டுமே எனது இறுதி முடிவை தேடி கொள்ள போகிறேன். என்னுடைய மரணமாவது சகோதர, சகோதரிகளுக்கு ஒரு விடிவுகாலமாக இருக்கட்டும்.

பணிச்சுமையால் என் கணவர், குழந்தைகளுடன் பேசுவதற்கு கூட நேரமில்லை என்று
அந்த ஆடியோவில் ராஜேஸ்வரி கூறியுள்ளார். இந்த ஆடியோவை அனுப்பிய ராஜேஸ்வரி உறவினர் வீட்டில் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவரது குற்றச்சாட்டுகள் குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாகவும் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Kilpauk Police Inspector Rajeswari in Chennai threatens that she is going to commit suicide because of work load.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற