ட்ரெக்கிங் கிளப் உரிமையாளர் பீட்டர் வீட்டில் தேனி போலீசார் சோதனை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாலவாக்கத்தில் உள்ள ட்ரெக்கிங் கிளப் உரிமையாளர் பீட்டர் வான்கெய்ட் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.

தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதிக்கு கடந்த சனிக்கிழமை சென்னையை சேர்ந்த ஒரு குழுவினரும் ஈரோட்டைச் சேர்ந்த ஒரு குழுவினரும் ட்ரெக்கிங் சென்றனர்.

Police raid at Chennai trekking club owner Peter's house

கடந்த ஞாயிற்றுக்கிழமை அவர்கள் மலையில் இருந்து கீழே இறங்கிய போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கினர். இதில் 11 பேர் உயிரிழந்தனர்.

காயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். ட்ரெக்கிங் அழைத்து சென்றது குறித்து விளக்கமளித்த சென்னை ட்ரெக்கிங் கிளப் விவசாயிகள்தான் காட்டுக்கு தீ வைத்ததாக பழி கூறியது.

இந்நிலையில் ட்ரெக்கிங் கிளப்பின் உரிமையாளரான பீட்டர் வான்கெய்ட்டின் சென்னை பாலவாக்கம் வீட்டில் தேனி போலீசார் சோதனை நடத்தினர்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Police raid at Chennai trekking club owner Peter's house. 11 people died in chennai trekking club team after forest fire.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற