விஷ்ணுபிரியாவிடம் 600 மணிநேரம் பேசிய அர்ச்சகர் எங்கே? தேடும் சி.பி.சி.ஐ.டி போலீஸ்
நாமக்கல்: தற்கொலை செய்து கொண்ட பெண் டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா அர்ச்சகர் ஒருவருடன் 600 மணி நேரம் செல்போனில் பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. மாயமான அர்ச்சகர் பிடிபட்டால் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் விஷ்ணு பிரியா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பாக நாமக்கல் எஸ்.பி செந்தில்குமார் செல்போனில் பேசியதாகவும் கூறப்படுகிறது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் டி.எஸ்.பி. யாக பணிபுரிந்து வந்த விஷ்ணுப் பிரியா கடந்த 18ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். கோகுல்ராஜ் கொலை வழக்கில் மேலதிகாரிகளின் 'டார்ச்சர்' காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்தது.
விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை தமிழக சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே தற்கொலை செய்து கொண்ட விஷ்ணுபிரியாவின் செல்போன் உரையாடல்களை சி.பி.சி.ஐ.டி போலீசார் ஆராய்ந்தனர். அப்போது திருப்பத்தூரில் பயிற்சி பெற்ற போது பழக்கமான அர்ச்சகர் ஒருவருடன் விஷ்ணுப்பிரியா 600 மணி நேரம் செல்போனில் பேசியது தெரியவந்ததுள்ளது.
டி.எஸ்.பி., விஷ்ணுபிரியா சிவகங்கை மாவட்டம் திருப்புத்துாரில் பயிற்சியில் இருந்தபோது திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோயிலுக்கு தரிசனத்திற்காக அடிக்கடி சென்றுள்ளார். கோயிலில் அர்ச்சகரின் உதவியாளர் விஜயராகவன், 29 என்பருடன் நட்பு ஏற்பட்டுள்ளது.
திருச்செங்கோடு சென்ற பின்னும் செல்போனில் அடிக்கடி பேசியதாக சி.பி.சி.ஐ.டி.,போலீசார் விசாரணையில் தெரிந்துள்ளது. இந்நிலையில் சில நாட்களாக விஜயராகவன் தலைமறைவாக உள்ளார். அவர் எங்கு சென்றார் என தெரியவில்லை.

விஜயராகவன் மாயம்
கடந்த வாரங்களில் அவர் கோயில் பணிக்கும் செல்லவில்லை. டி.எஸ்.பி விஷ்ணு பிரியா உடன் அடிக்கடி செல்போனில் பேசியதை அடுத்து அவர் பற்றி சிபிசிஐடி போலீசார் விசாரிக்கவே கடந்த 4 நாளுக்கு முன் விஜயராகவன் மாயமானது தெரியவந்தது.
சி.பி.சி.ஐ.டி., போலீசார் விஜயராகவனை விசாரணைக்காக அழைத்து சென்றிருக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் விஜயராகவனின் செல்போனும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

தலைமறைவு
சி.பி.சி.ஐ.டி., போலீசார் தேடி வருவது தெரிந்து தலைமறைவு ஆனாரா என தெரியவில்லை.அவரது குடும்பத்தாரிடம் கேட்ட போது, 'நான்கு நாட்களுக்கு முன் வெளியே சென்றவர் காணவில்லை. எங்களிடமும் தகவல் சொல்லவில்லை' என கூறிவிட்டதாக தகவல் வெளியானது.

வழக்கில் திருப்பம்
தற்போது தலைமறைவாக இருக்கும் விஜயராகவனை போலீசார் தேடி வருகின்றனர். அர்ச்சகர் விஜயராகவன் பிடிபட்டால் இந்த வழக்கில் மேலும் பல திருப்பங்கள் ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.

எஸ்.பி செந்தில்குமார்
இது ஒருபுறம் இருக்க தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு விஷ்ணுப்ரியாவிடம் எஸ்.பி. செந்தில்குமார்தான் கடைசியாகப் பேசியிருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அவர் சொன்ன ஆட்கள் மீது குண்டாஸ் போடாமல் இழுத்தடித்தார் எனக் கூறியதோடு ஒருமையில் திட்டினாராம். விஷ்ணுப்ரியா தற்கொலை செய்துகொண்ட தகவல் கிடைத்ததும் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தசெந்தில்குமார். வீட்டின் கதவை உடைத்து விஷ்ணுப்ரியா எழுதிய கடிதம், செல்போன் டேப்லெட், லேப்டாப் அனைத்தையும் கைப்பற்றியிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

கடிதம் மறைப்பு
விஷ்ணுப்ரியா எழுதிய கடிதத்தில் நான்கு பக்கங்களை எஸ்.பி மறைத்துவிட்டதாகவும் அந்த நான்கு பக்கங்களில்தான் எஸ்.பி கொடுத்த அழுத்தம் பற்றி எழுதியிருக்கிறார் என்பதும் விஷ்ணு பிரியா உறவினர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications